தேவையான பொருட்கள்:
பாதம் மாவு
100% இனிப்பற்ற கோகோ பவுடர்
தூய தேங்காய் பால்
வாழைப்பழம் (இனிப்பு சுவைக்கு)
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில், பாதம் மாவுடன், கோகோ பவுடர் சேர்த்து நன்கு கலக்கவும்.
* இப்போது நன்கு மசித்த வாழைப்பழத்தை சேர்த்து கேக் மாவு பதத்திற்கு கலக்கவும்.
* இத்துடன் தேங்காய் பாலினை கலந்து. குளிர்சாதன பெட்டியில் வைக்கவும் (Freeze it).
* ஐஸ்கிரீம் பதத்திற்கு வந்ததும் வெளியில் எடுத்து பரிமாறவும்.
இந்த 2015ம் ஆண்டு, சுவையான இனிப்பினை வைத்து இனிதே இந்த சமையல் ப்ளாக் ஆரம்பிக்கப்படுகிறது :)
நமக்காக இந்த சமையல் குறிப்பினை வழங்கிய "Rishi Raveendran" அவர்களுக்கு நன்றி :)
செய்திடுவோம்,எளிமையாகத்தான் இருக்கு.
ReplyDelete100% இனிப்பில்லா கோகோ பவுடர்
ReplyDeleteஆரம்பமே ஐஸ்கிரீமா, ஜமாய்ங்க
ReplyDelete