Thursday, January 8, 2015

ப்ரோக்கோலி சூப்



தேவையான பொருட்கள்:

ப்ரோக்கோலி
சீஸ்
வெங்காயம் -1
பூண்டு - 2 பல்
இஞ்சி -1 துண்டு
பச்சை மிளகாய்
மல்லி இலை
பெருங்காயத் தூள்
மஞ்சள் தூள்
உப்பு
வெண்ணெய்
கடுகு
சீரகம்
உளுத்தம்பருப்பு
மிளகாய் வற்றல்

செய்முறை:
    
* வெங்காயத்தை இரண்டாக வெட்டி ஒரு பாதியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அடுத்த பாதியை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்
* பூண்டை சிதைத்துக் கொள்ளவும்இஞ்சியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
* மிதமான சூட்டில் வாணலியில் இரண்டு டேபிள்ஸ்பூன் வெண்ணெய் போட்டு, அதில் வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், பாதி இஞ்சி சேர்த்து நன்கு வதக்கவும்உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும்.
* வெங்காயம் நன்கு வதங்கியதும் ப்ரோக்கோலி சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
* நன்கு ஆறியதும், ப்ளண்டரில்  ஒன்று இரண்டாக அரைத்துக் கொள்ளவும்
* அடுப்பில் மிதமான தீயில் வாணலியில் இரண்டு டேபிள்ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, மிளகாய்வற்றல், காயத்தூள் சேர்க்கவும்.
* கடுகு வெடித்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், சிதைத்த பூண்டு, இஞ்சித் துண்டுகள் சேர்த்து  வதக்கவும்உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும்
* வெங்காயம் நன்கு வதங்கியதும் ப்ளண்டரில் உள்ள கலவையைச் சேர்த்து 5-7 நிமிடங்கள் குறைந்த தீயில் சூடாக்கவும்
* மல்லிதைழை சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

நமக்காக இந்த சமையல் குறிப்பினை வழங்கிய "Rishi Raveendran" அவர்களுக்கு நன்றி :)

குறிப்பு: இந்த சமையல் குறிப்பினை தமிழாக்கம் செய்து கொடுத்த "Shanthi Pettai" அவர்களுக்கு நன்றி :)








No comments:

Post a Comment