முந்தி எல்லாம் ப்ரிட்ஜ் கண்டுபிடிக்குமுன் காய்கறிகளை ஊறுகாய் போட்டுத்தான் பாதுகாத்து வந்தார்கள். இதில் வெள்ளரியை ஊறுகாய் போட்டு பெர்மெண்ட் செய்வது மிக எளிது என்பதுடன் சமைக்காமல் செய்வதால் அதில் ப்ரோபயாடிக்ஸும் கிடைக்கும்.
செய்முறை
நன்றாகக்காற்றுபுகாமல் மூடக்குடிய கண்ணாடி ஜாடி ஒன்றை மூடியுடன் எடுங்கள். ஜாடியையும், மூடியையும் நன்றாகக்கழுவி வெந்நீரில் இட்டு ஸ்டெரிலைஸ் செய்யவும்.
செய்முறை
நன்றாகக்காற்றுபுகாமல் மூடக்குடிய கண்ணாடி ஜாடி ஒன்றை மூடியுடன் எடுங்கள். ஜாடியையும், மூடியையும் நன்றாகக்கழுவி வெந்நீரில் இட்டு ஸ்டெரிலைஸ் செய்யவும்.
தேவையான பொருட்கள்:
2- 3 வெள்ளரி. அதை நாலாக அல்லது எத்தனை பீஸாக வேண்டுமானாலும் வெட்டவும். ஜாடி கொள்ளும் அளவு வெள்ளரியை உள்ளே போடலாம்
3 மேஜைக்கரண்டி வினிகர்
1 மேஜைக்கரண்டி உப்பு
20 மிளகுகள்
1/2 மேஜைக்கரண்டி சிகப்புமிளகாய் துண்டுகள்

செய்முறை:
* ஜாடியை எடுத்து அதில் வெள்ளரியை இட்டு நிரப்பவும். அதன்பின் நீரைத்தவிர மற்ற இன்க்ரிடியண்ட் அனைத்தையும் இடவும்.
* அதன்பின் நீரை ஊற்றி வெள்ளரி அனைத்தும் மூழ்கும் அளவு ஊற்றவும். ஆனால் பாட்டிலை முழுக்க நீரால் நிரப்பவேண்டாம். மேலே கொஞ்சம் வெற்றிடம் இருக்கவேண்டும். அதன்பின் காற்றுபுகாமல் இறுக்க மூடிவிடவேண்டும்.
* பாட்டிலை நன்றாகக்குலுக்கி அதை கவுண்டர்டாப்பில் வைத்துவிடவும். 12 மணிநேரம் அதைத்தொடவேண்டாம்.
* பாட்டிலை நன்றாகக்குலுக்கி அதை கவுண்டர்டாப்பில் வைத்துவிடவும். 12 மணிநேரம் அதைத்தொடவேண்டாம்.
* அதன்பின் மீண்டும் எடுத்து நன்றாக ஒரு குலுக்கு குலுக்கி வைத்துவிடவும்
* 24 மணிநேரம் கழித்து தினம் 1- 2 துண்டு எடுத்து சாப்பிட தேவாமிர்தமாய் இனிக்கும். ப்ரிட்ஜில் வைத்து ஒரு மாதம் சாப்பிடலாம்.
* 24 மணிநேரம் கழித்து தினம் 1- 2 துண்டு எடுத்து சாப்பிட தேவாமிர்தமாய் இனிக்கும். ப்ரிட்ஜில் வைத்து ஒரு மாதம் சாப்பிடலாம்.
இந்த சுவையான சமையல் குறிப்பினை வழங்கிய "Neander Selvan" அவர்களுக்கு நன்றி :)
இந்த முறையில் வைத்தால் பூஞ்சை வருவது போல் உள்ளதே அதனை எவ்வாறு தடுப்பது?
ReplyDelete