Thursday, January 8, 2015

சுரைக்காய் கேக்



தேவையான பொருட்கள்:
சுரைக்காய்
வெங்காயம்
இஞ்சி
கறிவேப்பிலை
தக்காளி
காரட்
பச்சை மிளகாய்
மஞ்சள் தூள்
உப்பு
குறுமிளகு
சீரகம்
ஏதாவுது ஒரு  paleo மாவு (பாதாம் மாவு, flax seeds powde,தேங்காய் பவுடர்)
நான் உபயோகித்தது - பாதாம் மாவு, flax seeds powde,தேங்காய் பவுடர்

குறிப்பு: பதம் கிடைக்கும் வரை மாவுகளை சேர்க்கவும்.

செய்முறை:
* சுரைக்காய் மற்றும் காரட்  துருவி வைக்கவும்
* இத்துடன் நறுக்கிய வெங்காயம்,இஞ்சி,பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்க்கவும்.
* இப்பொழுது மாவினை சேர்க்கவும். இத்துடன் உப்பு,மஞ்சள் தூள், சீரகம் சேர்த்து மாவினை நன்கு பிசையவும்.
* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேற்றவும். கல் சூடேறியவுடன் அடுப்பை மீடியம் தீயில் வைக்கவும்.
* காய்ந்த தோசைக் கல்லில் வெண்ணை தேய்த்து, மாவு கலவையினை கேக் போல் மெதுவாக தட்டவும்.
* சிறிது வெந்த பிறகு நெய் தடவி, மெதுவாக திருப்பி...இருபக்கமும் வேகவைத்து எடுக்கவும்.
* தேங்காய் சட்னியுடன் பரிமாறவும். இட்லி பொடியும் வைத்துக்கொள்ளலாம்.


இந்த சமையல் குறிப்பினை வழங்கிய "Rishi Raveendran" அவர்களுக்கு நன்றி :)






1 comment:

  1. Hello sir, I tried this recipe taste was awesome!! But could not take out from dosa pan,came out like kali:)Did i make any mistake? can you please explan thanks

    ReplyDelete