தேவையான பொருட்கள்:
மீன் தலை 4
காரட் 2
காளிப்ளவர் - 100 கிராம்
உப்பு, மிளகாய் பொடி
செய்முறை:
கொழுப்பு அதிகம் உள்ள சால்மன் மாதிரி மீன்களை தவுர்க்கவும். (கிட்சன் நாற்றம் பொறுக்க முடியாது:-)
காரட், காலிபிளவரை வெட்டி மிக்ஸியில் நீர் விட்டு நன்றாக அரைக்கவேண்டும். அதன்பின் ஸ்லோகுக்கரில் இட்டு, மீன்தலையை இட்டு போதுமான அளவு நீர், உப்பு, மிளகாய் பொடி இட்டு 4.5 மணிநேரம் சமைக்கவேண்டும். அதன்பின் தலையில் எலும்பு கூட மிஞ்சாது. அனைத்தும் சூப்பில் கரைந்ததுவிடும். சில கூரான பொடி எலும்புகள் இருக்கலாம், பார்த்து அகற்றவும். குழந்தைகளுக்கு கொடுக்கையில் எச்சரிக்கை அவ்சியம்.
மினரல் சத்துக்கள் நிரம்பிய எலும்புகளை உண்ணனிது மிக சிறந்த வழி..எனக்கு மீன் தலை இலவசமாக கிடைத்ததால் சூப்புக்கு ஆன செலவு என்பது காரட்டும், காளிபிளவரும் தான்
நமக்காக இந்த சமையல் குறிப்பினை வழங்கிய "Neander Selvan" அவர்களுக்கு நன்றி :)
அருமையான குறிப்பு
ReplyDelete