Friday, January 9, 2015

கோடி வெப்புடு வித் பெப்பர் பவுடர்

தேவையான பொருட்கள்:
கோழி - 1/4 கிலோ
பொடியாக நறுக்கிய வெங்காயம்  - 1
நீளவாக்கில் நறுக்கிய தக்காளி - 1
கறிவேப்பிலை - கொஞ்சம்
மிளகாய்த் தூள் - 1 tbsp
கொத்தமல்லித் தூள் - 1 tbsp
பட்டை - 1
கிராம்பு/லவங்கம் - 3
ஏலக்காய் - 2
தேங்காய் எண்ணெய்
உப்பு - தேவையான அளவு

கோழியுடன் ஊறவைக்க:
கோழி - 1/4 கிலோ
இஞ்சி,பூண்டு விழுது - 1 தேக்கரண்டி (tsp)
மஞ்சள் தூள்  -1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
தயிர் - 1 தேக்கரண்டி
எழுமிச்சை சாறு - 1 பழம்
பச்சை மிளகாய்  - 1
கறிவேப்பிலை - கொஞ்சம்
உப்பு - சிறிது

மேலேகூறிய அனைத்தையும் நன்றாக கலக்கி, குளிர்சாதனப் பெட்டியில் குறைந்தது 1 மணிநேரம் வைக்கவும். ரொம்ப நேரம் ஊறினால் ருசி அதிகம்.

வறுத்துப் பொடிக்க:
குறுமிளகு - 10
சோம்பு  - 1 தேக்கரண்டி

வெறும் சட்டியில் மிளகையும்,சோம்பையும் தனித்தனியாக வறுத்து, பொடித்து வைக்கவும்.


செய்முறை:
* கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காயவைக்கவும். எண்ணெய் காய்ந்ததும் பட்டை,கிராம்பு,லவங்கம்,ஏலக்காய் சேர்க்கவும். இவை பொரிந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்,வெங்காயம் வதங்கியதும், தக்காளி சேர்த்து, உப்பு தூவி மூடி வைக்கவும்.
* நன்றாக வெந்த வெங்காயம்,தக்காளி கலவையுடன் ஊறவைத்த கோழியை  சேர்த்து, கொஞ்சம் வேகும் வரை  வதக்கவும்.
* இத்துடன் மிளகாய்த் தூள், மல்லித்தூள்,உப்பு சிறிதளவு சேர்த்து பச்சவாசனை போகும் வரை  வதக்கவும்.
* கொஞ்சம் தண்ணீர் தெளித்து மூடி போடாமல் வேகவைக்கவும். தண்ணீர் சுண்டும்போது, கிளறிக்கொண்டே இருக்கவும்.
* கோழி வெந்ததும், வறுத்துப் பொடித்த பொடியை தூவி, கிளறி இறக்கவும்.
* இப்போது சுவையான "கோடி வெப்புடு  வித் பெப்பர் பவுடர்" தயார்.

இந்த சமையல் முறையை வழங்கிய "Mythili Thiyagu" வுக்கும் ஒரு நன்றிய போட்டுவைப்போம் :)

No comments:

Post a Comment