பட்டர் நட் ஸ்கவாஷ் சூப் அப்படின்னு இங்கே செல்வன் ஒரு முறை போட்டிருந்த ஞாபகம் ...அதில் மஞ்சள் பூசணிக்காய் , வெண்ணெய், வெங்காயம் சேர்த்து கூட ஆப்பிள் போட்டு வதக்கி , காரத்திற்கு மிளகும் கூட உப்பும் சேர்த்து அரைத்து சூப் போல சாப்பிடலாம் என்று இருந்தது ..அதை நான் ஒருமுறை செய்தும் சாப்பிட்டேன் ...அதையே இப்போ கொஞ்சம் மாற்றி கூட காப்சிகம் சேர்த்து வெறும் காய்கறியாக செய்தேன் ...
தேவையான பொருட்கள்:
பட்டர்நட் பூசணி
சீரகம்
சோம்பு
ரைத்த பட்டை கிராம்பு மசாலா
வெங்காயம்
பூண்டு
குடைமிளகாய்
மிளகு
மிளகாய் தூள்
உப்பு
ஆப்பிள் துண்டங்கள்
கொத்தமல்லி
செய்முறை:
வெண்ணெய் மூன்று டேபிள்ஸ்பூன் ஒரு வாணலியில் விட்டு அது உருகிய பின் அதில் சீரகம், கொஞ்சம் சோம்பு , வீட்டில் அரைத்த பட்டை கிராம்பு மசாலா ஒரு ஸ்பூன் , வெங்காயம் , பூண்டு சேர்த்து வதக்கி அதில் நறுக்கிய பூசணி துண்டுகள், குடைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி வெந்தவுடன் அதில் உப்பு , கொஞ்சம் காரம் அதிகமாக மிளகு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து வதக்கி பின் அதில் நறுக்கிய ஆப்பிள் துண்டங்களும் கொத்தமல்லியும் சேர்த்து ஒரே ஒரு கிளறு கிளறிவிட்டு இறக்கிவிடவும் ...இது வட இந்தியாவில் செய்யும் kaddu sabzi போலதான் கொஞ்சம் மாற்றத்துடன்.
இந்த சுவையான சமையல் குறிப்பினை வழங்கிய "Dolly Bala" அம்மா அவர்களுக்கு நன்றி :)
No comments:
Post a Comment