எலும்புகள், மூட்டுகளுக்கு நலமளிக்கும் செம்மறியாட்டுத்தோள்பட்டை சூப்
செம்மறிஆட்டின் தோல்ப்பகுதி தசை மற்றும் எலும்புமஜ்ஜை ஆகியவற்றால் செய்த சூப் இது. எலும்புமஜ்ஜை உலகின் முதல் சூப்பர் புட் என அழைக்கப்படுகிறது. அதில் சூப் செய்து அருந்தினால் எலும்புகளுக்கு நலனளிக்கும் கால்ஷியம், மக்னிசியம் முதலான மினரல்கள் அனைத்தும் கிடைக்கும்.
தேவையான பொருட்கள் :
150 கிராம் தோளெலும்பு
1- 2 சின்ன உருளைக்கிழங்கு
1 காரட்
3 செலரி துண்டுகள்
உப்பு, மசாலா தேவைக்கேற்ப. நான் பயன்படுத்தியது 2 ஸ்பூன் உப்பு, 2 ஸ்பூன் சாம்பார் பொடி, 1 ஸ்பூன் கரம் மசாலா, 1 ஸ்பூன் மல்லிப்பொடி
1- 2 சின்ன உருளைக்கிழங்கு
1 காரட்
3 செலரி துண்டுகள்
உப்பு, மசாலா தேவைக்கேற்ப. நான் பயன்படுத்தியது 2 ஸ்பூன் உப்பு, 2 ஸ்பூன் சாம்பார் பொடி, 1 ஸ்பூன் கரம் மசாலா, 1 ஸ்பூன் மல்லிப்பொடி
செய்முறை:
* வாணலியில் நெய்யை விட்டு தோளெலும்பு பகுதிகளை அதில் விட்டு நன்றாக பிரவுன் நிறம் வரும் வரை இருபுறமும் திருப்பிபோட்டு வணக்கவேண்டும். இப்படி வணக்குவது அதன் சுவையை அதிகரிக்கும்.
* அதன்பின் மாமிசத்தை ஸ்லோகுக்கரில் இட்டு, மேலே வெட்டிய காய்கறிகளை போட்டு மசாலாவை சேர்த்து இவை எல்லாம் மூழ்கும் அளவுக்கு சற்று மேல் நீரை ஊற்றி மூடிவிடவேண்டும். ஸ்லோகுக்கரில் 3 மணிநேரத்தில் சுவையான சூப் தயாராகிவிடும்.
குறிப்பு: ஸ்லோகுக்கர் இல்லையெனில் சாதாரண மூடி போட்ட பாத்திரத்தில் மூடி அடுப்பை மிதவெப்பத்தில் வைத்து மூன்றுமணிநேரம் சமைக்கலாம்.
தகவல்: சூப்பின் புகைப்படத்தில் எண்ணெய்படலம் போல் மிதப்பது முழுக்க உறைகொழுப்பு. இதை பகுதி உண்டுவிட்டு, ப்ரிட்ஜில் வைத்து அடுத்தநாள் எடுத்துப்பார்த்தால் கொழுப்புப்படலம் மேலே ஜெலடினாக படிவதைக்காணலாம். ஜெலடின் நம் எலும்புகளுக்கு மிக நல்லது.
அதனால் முதல்நாள் சிறிது திரவம், மற்றும் அனைத்துக்காய்கறி, மாமிசத்தையும் உண்டுவிட்டு மீதமிருந்த சூப்புத்திரவத்தை ப்ரிட்ஜில் வைத்தேன். அடுத்தநாள் கடும்குளிரில் திரவத்தை காப்பிக்கோப்பையில் ஊற்றிப்பருகுகையில் குளிருக்கு மிக இதமாக இருந்தது
தினந்தோறும் இத்தகைய்சூப்புகளைப்பருகிவருவதால் இக்குளிர்காலத்தில் சளி, காய்ச்சல் என எத்தொல்லையும் இல்லாமல் இருக்கிறேன்.
இந்த சுவையான, ஆரோக்கியமான சமையல் குறிப்பினை வழங்கிய "Neander Selvan" அவர்களுக்கு நன்றி.
No comments:
Post a Comment