தேவையான பொருட்கள்:
சுரைக்காய் (பொடியாக நறுக்கியது) - 1
கடுகு - 1 டீஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - 1/2 கப்
பச்சை அல்லது சிவப்பு மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
வீட்டில் அரைத்த சாம்பார் பொடி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தக்காளி (பொடியாக நறுக்கியது) - 1
சீரகத்தூள் - சிறிதளவு
மிளகுத்தூள் - சிறிதளவு
செய்முறை:
* கடாயில் எண்ணை காய்ந்ததும், கடுகு தாளித்து, நறுக்கிய வெங்காயம்,பச்சை அல்லது சிவப்பு மிளகாய்,கறிவேப்பில்லை தாளிக்கவும்.
* வெங்காயம் வதங்கியதும், பொடியாக நறுக்கிய சுரக்காய் சேர்க்கவும். இத்துடன் சிறிதளவு சாம்பார் பொடி,உப்பு சேர்த்து நன்கு கிளறி மூடி வைத்து வேகவிடவும்.
* காய் பாதிக்கு மேல் வெந்ததும், நடுவில் குழி செய்து பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்தவும்.இத்தக்காளியை சுற்றியும் சுரைக்கையால் மூடி, பாத்திரத்தை மூடி வைக்கவும்.. 5 நிமிடம் சிறு தீயில் வேகவைத்து இறக்கவும்.
* வெந்த சுரைக்காயை ஒரு பாத்திரத்தில் ஆறவைக்கவும்.
* இத்துடன் தயிர்,சீரகத்தூள், மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். சுவையான சுரைக்காய் தயிர் பச்சடி ரெடி
சமையல் குறிப்பு: "Mythili Thiyagu" - பரம்பரை சமயல் :)
No comments:
Post a Comment