தேவையான பொருட்கள்:
முட்டை - 4
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1/2
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1
பொடியாக நறுக்கிய முட்டை கோஸ் - 1/3
துருவிய காரட் - 1
பொடியாக நறுக்கிய குடை மிளகாய் - 1
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - கொஞ்சம்
பொடியாக நறுக்கிய புதினா - கொஞ்சம்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - கொஞ்சம்
உப்பு - தேவையான அளவு
மிளகுத்தூள் - 1 சிட்டிகை
நெய்/ எண்ணெய்
செய்முறை:
* ஒரு வாணலியில் நெய்/தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பச்சை மிளகாய் வதக்கவும். பச்சை மிளகாய் வெள்ளை ஆனதும், வெங்காயம் வதக்கவும்.
* சிறிது வெங்காயம் வதங்கிய பின், குடை மிளகாய் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
* பின்பு முட்டை கோஸ்,காரட் சேர்த்து பிரட்டி விடவும். இந்த காய்கள் சேர்த்த பின்பு ரொம்ப வதக்கத் தேவையில்லை.
* இப்போது அடுப்பை அனைத்து, புதினா,கொத்தமல்லி சேர்க்கவும். நன்கு கலக்கி விடவும்.
* ஒரு பாத்திரத்தில் முட்டை உடைத்து நன்கு அடிக்கவும். இத்துடன் உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து கலக்கவும்.
* முட்டையுடன் வதக்கிய காய்களை கலக்கவும்.
* பனியாரக்கல் சூடேறியதும் முட்டைக் கலவையை பணியாரம் போல் நெய்யில் வார்த்து/சுட்டு எடுக்கவும்.
குறிப்பு: பேலியோ தக்காளி சட்னியுடன் 2 பணியாரம் அதிகமாக உள்ளே போகும். பேலியோ தக்காளி சட்னியை கூடிய விரைவில் சமையல் குறிப்பில் சேர்த்துவிடுகிறேன் :)
சமையல் குறிப்பு: Mythili Thiyagu
இது வெஜிடபுள் ஆம்லெட். சில இடங்கள்ல கரண்டி ஆம்லெட்னும் சொல்லுவாங்க. நாம அதையே பனியாரக் கல்லுல ஊத்தி முட்டைப் பனியாரம்னு சாப்பிடுறோமா? ஓகே ஓகே. ஒரிஜினலா முட்டைப் பனியாரம் பனியார மாவுல முட்டை அடிச்சு ஊத்திக் கலக்கி சுடறதுதான் முட்டைப் பனியாரம்.
ReplyDelete