Wednesday, January 7, 2015

ப்ரிட்டாட்டா




தேவையான பொருட்கள்:

1 டேபிள்ஸ்பூன் ஆலிவ் ஆயில்
1/2 கப் வெங்காயம்
1 கப் பெல்பெப்பர்
10 முட்டை
1/2 கப் பால்
1 கப் தக்காளி(கிரேப் டொமாடோ நல்லது)
1 கப் கீரை
1/2 கப் சீஸ் (கிரேட் செய்தது, பெடா சீஸ் அல்லது ஆட்டுப்பால் சீஸ் நன்றாக இருக்கும்)

செய்முறை:

அவனை 350 டிகிரி வெப்பத்தில் ப்ரிஹீட் செய்யவும்
வாணலியை ஆயில் விட்டு சூடாக்கவும். வெங்காயம், பெல்பெப்பரை விட்டு வணக்கவும், உப்பு, பெப்பெர் இன்னபிற மசாலா சுவைக்கு ஏற்ப சேர்க்கவும்

ஒரு பவுலில் முட்டையையும் பாலையும் விட்டு அடிக்கவும். தக்காளி, கீரையை பவுலில் சேர்க்கவும், உப்பு, பெப்பெர் சேர்க்கவும்

பவுலில் உள்ள முட்டையை வாணலியில் ஊற்றவும். மேலே சீஸ் தூவவும். அவனில் வைத்து 20- 25 நிமிடம் வேகவிடவும்.

அதன்பின் எடுத்து பீட்சா மாதிரி வெட்டி பரிமாறவும். மூன்று பேர் சாப்பிடலாம்


ஓவன் இல்லையெனில் அடுப்பில் உள்ள வாணலியில் மூடிபோட்டு அப்படியே விட்டுவிடவும். வெந்தபின் உண்ணவும் .

இந்த சமையல் குறிப்பினை தயாரித்துக்  கொடுத்திருக்கும் "Neander Selvan" அவர்களுக்கு நன்றி.


No comments:

Post a Comment