இது கிரேவி உணவு வகை ..சைட் டிஷ் ஆக செய்வதை நான் எனக்கு மெயின் உணவாக மாற்றி செய்வேன் ..
இதை பன்னீர் சேர்த்தும் , நான்வெஜ் உண்பவர்கள் சிக்கென் சேர்த்தும் செய்யலாம் ..ச
தேவையான பொருட்கள்:
மஷ்ரூம் 200 gm,
காப்சிகம் ஒன்று
வெங்காயம் பெரிது இரண்டு
தக்காளி மீடியம் இரண்டு
உலர்ந்த வெந்தய இலை (கசூரி மேத்தி) கொஞ்சம்
ஐம்பது கிராம் முந்திரி ஊறவைத்து அரைத்து கொள்ளவும்
கரம் மசாலா பொடி அரைக்க தேவையானது
கொத்தமல்லி விதை .ஒரு டீஸ்பூன்
சீரகம் ஒரு டீஸ்பூன்
பட்டை, கிராம்பு தேவையான அளவு
கசகசா ஒரு டீஸ்பூன்
மிளகு ஒரு டீஸ்பூன்
வரமிளகாய் ஐந்து
இவற்றை வெறும் வாணலியில் வறுத்து பொடித்து வைக்கவும்
வெண்ணை நூறு கிராம்
உப்பு தேவையான அளவு .
இந்த உணவை நல்ல மண் சட்டியில் செய்வது அதற்கு ஒரு தனி சுவையை தரும்
மஷ்ரூம் நன்றாக மண் போக கழுவி சிறிய துண்டங்களாக வெட்டி அதை கொஞ்சம் வெண்ணையில் வதக்கி நன்றாக நீர் வற்றும் வரை வேக விடவேண்டும் ..தனியாக நீர் சேர்க்க தேவையில்லை ..
வெங்காயம் மற்றும் காப்சிகம் இரண்டையும் சிறு துண்டங்களாக வெட்டி அதையும் வெண்ணையில் நன்றாக வதக்க வேண்டும்
..தக்காளியை அரைத்து இந்த வதக்கிய மஷ்ரூம், வெங்காயம் , காப்சிகத்துடன் சேர்த்து பச்சை மணம் போக வதக்கி , அத்துடன் அரைத்த மசாலா பொடி, உப்பு , மற்றும் அரைத்த முந்திரி விழுதையும் சேர்த்து நன்றாக வதக்கி இறக்கி வைக்கும்போது உலர்ந்த வெந்தய இலை மற்றும் மஞ்சள் தூள் சிறிது சேர்த்து சேர்வ் செய்யவும் ..சைட் டிஷ் ஆக செய்யும்போது கொஞ்சம் நீர் சேர்த்து கொதிக்க விடவேண்டும் ..நமக்கோ இது மெயின் டிஷ் ..அதனால் இதை கெட்டியாக செய்தால் போதும்
இந்த சமையல் குறிப்பினை வழங்கிய "Dolly Bala" அம்மா அவர்களுக்கு நன்றி :)
No comments:
Post a Comment