தேவையான பொருட்கள்: சவ் சவ், வெங்காயம், தயிர், நெய்/எண்ணெய், கடுகு, உளுந்தம்பருப்பு, பெருங்காயம், கருவேப்பிலை, கொத்த மல்லி இலை, பச்சை மிளகாய்.
சவ் சவ் காயை தோல் நீக்கி வேக வைத்துக்கொள்ளவும். வெங்காயத்தை தனியாக வெட்டி வைத்துக்கொள்ளவும்- சின்ன வெங்காயம் போட்டால் கூடுதல் சுவை, பிறகு கடாயில் நெய்/எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு, கருவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம், பெருங்காயம் போட்டு வதக்கிக் கொள்ளவும். .
இதை தயிரில் சேர்க்கவும். சவ் சவ் நன்றாக ஆறினவுடன் அதையும் சேர்த்து கலக்கவும். கடைசி டச்சாக கொத்தமல்லி தளைகளை போட்டு கார்னிஸ் செய்யவும்.
எங்கள் தம்பி, தங்கக் கம்பி, சைனடு குப்பியின் கருத்து: இதன் மருத்துவ பலன்:
நூறு கிராம் அளவுள்ள சவ் சவ்வில் இருக்கும் கார்ப் அளவு மிக குறைவே(4.51 கிராம்) ஆதலால் பேலியோவுக்கு உகந்த உணவு. கூகிளிட்டு பார்த்தால், இதற்க்கு உயர் ரத்த அழுத்த அளவை கட்டுப்படுத்தும் தன்மை இருப்பதாக தெரிகிறது.
இதில் விட்டமின் சி மற்றும் Folate அபரிமிதமாக உள்ளது, Folate என்பது நீரில் கரையும் விட்டமின் இதய நோய் வருவதிலிருந்து காப்பாற்றும் என தெரிகிறது. விட்டமின் சி ஒரு ஆண்டி ஆக்ஸிடண்ட் என்பது நமக்கு தெரியும், அத்தோடு புற்று நோய் வராமல் பாதுகாக்குமாம். இதில் உள்ள மாங்கனிஸ் உடம்பில் உள்ள புரதம் மற்றும் கொழுப்பை எரிக்க உதவுமாம், அப்போ நிச்சயமாக பேலியோவுக்கு டயட்டுக்கு உகந்தது தான்.
இதில் உள்ள fiber மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு உதவும்.இது முக்கியமாக தைராய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கு உகந்த உணவாம், காப்பர் உள்ளதால். இதில் உள்ள விட்டமின் பி 6, மூளையின் நினைவுத்திறனை அதிகப்படுத்துமாம்.
இந்த சுவையான, ஆரோக்கியமான பேலியோ உணவு முறையின் சமையல் குறிப்பை வழங்கிய எங்கள் தம்பி, தங்கக் கம்பி, சைனடு குப்பி "Vasan Bangalore" மற்றும் "திருமதி வாசன்" அவர்களுக்கும் நன்றி.அண்ணி உங்ககிட்ட இன்னும் நிறையா சமையல் குறிப்புகளை எதிர்பார்க்கிறோம், அனுப்பிவைங்க :)
No comments:
Post a Comment