Friday, February 27, 2015

வாழைத்தண்டு சூப்



தேவையான பொருட்கள்:
வாழைத்தண்டு - அரை கப்
இஞ்சி - சிறிது
எலுமிச்சம் பழச்சாறு - தேவைக்கு
மிளகு - ஒரு மேசைக்கரண்டி
சின்ன வெங்காயம் - 5
சீரகம் - ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கு

செய்முறை:
* வாழைத்தண்டை சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறு, மிளகு, சின்ன வெங்காயம், சீரகம், உப்பு தேவைக்கு கலந்து நீர்விட்டு கொதிக்க வைத்து பிறகு சிறிது எண்ணெய் விட்டு தாளித்து சூப் போல் செய்து அருந்தலம்.

குறிப்பு:
வாழைத்தண்டு சாறு நரம்பு மண்டலத்தைத் தூண்டி சுறுசுறுப்பு அடையச் செய்யும்.
வயது முதிர்ந்த ஆண் பெண் இருபாலருக்கும் மூட்டு வீக்கம், மூட்டு வலி வந்து கை கால்கள் வீங்கி இருந்தால் வாழைத்தண்டு சாறு மிகுந்த பயனளிக்கும்.
வாழைத் தண்டில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, ஆகிய தாதுப் பொருட்கள், வைட்டமின் பி,சி ஆகியவை உள்ளன. சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் கல் அடைப்பைக் கரைக்கும். பித்தத்தைக் குறைக்கும்.

இந்த ஆரோக்கியமான சமையல் குறிப்பினை வழங்கிய "Vijayapriya Panneerselvam" அவர்களுக்கு நன்றி :)




கடாய் சிக்கன்



தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1/2 கிலோ
சதுரமாக வெட்டிய வெங்காயம் - 1 கப் 
சதுரமாக வெட்டிய குடைமிளகாய் - 1 கப் 
வேகவைத்து,தோலுரித்து அரைத்த தக்காளி - 1 கப் 
வெண்ணெய்  - 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள்  - சிறிதளவு 
வரமிளகாய் தூள்  - 2 டீஸ்பூன் 
கரம் மசாலா - 1 டீஸ்பூன் 
உப்பு தேவையான அளவு 
பால் - 1 டேபிள்ஸ்பூன் 

வறுத்து அரைக்க தேவையானவை: 
வரமிளகாய் - 3 
குறுமிளகு  - 10 
சீரகம் - 1 டீஸ்பூன் 
சோம்பு  - 1 டீஸ்பூன் 
கொத்தமல்லி விதை - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 5 
காய்ந்த வெந்தய கீரை (கஸ்தூரி மேத்தி) - சிறிது 

செய்முறை:
* மேலே வருக்க கொடுத்தவைகளை வெறும் சட்டியில் வறுத்து பொடித்து 2 பாகங்களா வைக்கவும்.
*  சிக்கன், உப்பு,மஞ்சள் தூள்,வரமிளகாய் தூள் சேர்த்து நன்கு பிசறி வைக்கவும். இதனை சிறிது எண்ணெய்  சேர்த்து பானில் (pan) வறுத்து வைக்கவும் (பொரிக்க கூடாது). 
* ஒரு கடாயில் (கடாய் பன்னீர் கடையில் தான் சமைக்க வேண்டுமாம்) வெண்ணை விட்டு பாதி உருகியதும், வறுத்து அரைத்த பவுடரில் பாதியை வெண்ணையில் சேர்த்து வதக்கவும். 
* வெண்ணெய்  முழுதும் உருகி, பவுடர் வதங்கி கொண்டிருக்கும் போது,அடுப்பை சிறு தீயில் வைத்து  வரமிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.
* இப்பொழுது சதுரமாக நறுக்கிய வெங்காயம் மற்றும் குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
* இவற்றுடன் அரைத்த தக்காளி விழுதினை சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து மூடி வேக விடவும்.
* நன்கு தக்காளியின் பச்சை வாசனை போகும் வரை வதக்கி, பின்பு உப்பு சேர்த்து கிளறவும்.
* இத்துடன் வறுத்த சிக்கனை சேர்த்து மெதுவாக கிளறவும்.
* பின்பு அரைத்த பவுடரில் மீதமுள்ள பாதியை சேர்த்து கிளறவும்.
* இத்துடன் பாலினை சேர்த்து ஒரு கொதி வந்ததும், கொத்தமல்லி தூவி இறக்கவும். 

சுவையான கடாய் சிக்கன் ரெடி.

சமையல் குறிப்பு: Mythili Thiyagu

கடாய் பன்னீர்


தேவையான பொருட்கள்:
பன்னீர் - 1 கப்
சதுரமாக வெட்டிய வெங்காயம் - 1 கப் 
சதுரமாக வெட்டிய குடைமிளகாய் - 1 கப் 
வேகவைத்து,தோலுரித்து அரைத்த தக்காளி - 1 கப் 
வெண்ணெய்  - 2 டேபிள்ஸ்பூன் 
வரமிளகாய் தூள்  - 1 டீஸ்பூன் 
கரம் மசாலா - 1 டீஸ்பூன் 
உப்பு தேவையான அளவு 
பால் - 1 டேபிள்ஸ்பூன் 

வறுத்து அரைக்க தேவையானவை: 
வரமிளகாய் - 3 
குறுமிளகு  - 10 
சீரகம் - 1 டீஸ்பூன் 
சோம்பு  - 1 டீஸ்பூன் 
கொத்தமல்லி விதை - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 5 
காய்ந்த வெந்தய கீரை (கஸ்தூரி மேத்தி) - சிறிது 

செய்முறை:
* மேலே வருக்க கொடுத்தவைகளை வெறும் சட்டியில் வறுத்து பொடித்து 2 பாகங்களா வைக்கவும். 
* ஒரு கடாயில் (கடாய் பன்னீர் கடையில் தான் சமைக்க வேண்டுமாம்) வெண்ணை விட்டு பாதி உருகியதும், வறுத்து அரைத்த பவுடரில் பாதியை வெண்ணையில் சேர்த்து வதக்கவும். 
* வெண்ணெய்  முழுதும் உருகி, பவுடர் வதங்கி கொண்டிருக்கும் போது,அடுப்பை சிறு தீயில் வைத்து  வரமிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.
* இப்பொழுது சதுரமாக நறுக்கிய வெங்காயம் மற்றும் குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
* இவற்றுடன் அரைத்த தக்காளி விழுதினை சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து மூடி வேக விடவும்.
* நன்கு தக்காளியின் பச்சை வாசனை போகும் வரை வதக்கி, பின்பு உப்பு சேர்த்து கிளறவும்.
* இத்துடன் பன்னீர் (சிறிது எண்ணையில் வருத்ததோ அல்லது அப்படியே பயன்படுத்தலாம்) சேர்த்து மெதுவாக கிளறவும்.
* பின்பு அரைத்த பவுடரில் மீதமுள்ள பாதியை சேர்த்து கிளறவும்.
* இத்துடன் பாலினை சேர்த்து ஒரு கொதி வந்ததும், கொத்தமல்லி தூவி இறக்கவும். 

சுவையான கடாய் பன்னீர் ரெடி.

சமையல் குறிப்பு: Mythili Thiyagu





Wednesday, February 25, 2015

கோவக்காய் அவியல்



தேவையானப்பொருட்கள்:
கோவக்காய் - 10 முதல் 15 வரை
மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - 3 முதல் 4 டேபிள்ஸ்பூன் வரை
சீரகம் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 அல்லது 3
தயிர் - 1/2 கப்
தேங்காய் எண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:
* கோவக்காயை கழுவி விட்டு, நீள வாக்கில் 4 அல்லது 5 துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்அதில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, நன்றாக பிசறி வைக்கவும்.
* தேங்காய் துருவல், சீரகம், பச்சை மிளகாய் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு, 1 அல்லது 2 டேபிள்ஸ்பூன் தயிரையும் சேர்த்து, சற்று கொரகொரப்பாக அரைத்துதெடுக்கவும்.
* ஒரு வாணலியை அடுப்பிலேற்றி, ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணை விட்டு காய்ந்ததும் அதில் கோவக்காய் துண்டுகளைப் போட்டு, 2 அல்ல்து 3 நிமிடங்கள் வரை வதக்கவும். பின்னர் அதில் ஒரு கை நீரைத் தெளித்துக் கிளறி விட்டு, மூடி வைத்து, மிதமான தீயில் வேக விடவும்.  
* காய் முக்கால் பங்கு வெந்தால் போதும், மூடியைத் த்றந்து, காயின் மேல் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதைப் போடவும். (இப்பொழுது கிளற வேண்டாம்).  அப்படியே மூடி வைத்து மேலும் 2 நிமிடங்கள் வேக விடவும்
* பின்னர் மூடியைத் திறந்து, கிளறி விட்டு, அதில் மீதமுள்ள தேங்காய் எண்ணையை ஊற்றி, கறிவேப்பிலையயும் சேர்த்துக் கிளறவும்   கடைசியில், தயிரை நன்றாகக் கடைந்து, காயில் ஊற்றிக் கிளறி, உடனே இறக்கி வைக்கவும்.

சமையல் குறிப்பு: Mythili Thiyagu



கேரட்-பாதாம் கேக்



தேவையான பொருட்கள்:
துருவிய கேரட் - 3 கப்
பாதாம் பவுடர்  - 3 கப்
வால்நட் - 1 கப்
தேங்காய் எண்ணெய் - 1/4 கப்
சின்னமன்  பவுடர் (பட்டை தூள்) - 1 டீஸ்பூன்
தேன் - 1/2 கப்
முட்டை - 5
பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்
உப்பு - 2 டீஸ்பூன்

செய்முறை
* கேரட், பாதாம் பவுடர், வால்நட், பேக்கிங் பவுடர், தேங்காய் எண்ணை, சின்னமன் பவுடர், தேன் மற்றும் முட்டை இவை அனைத்தையும் கலந்து பேக் (bake) செய்ய வேண்டும்



இந்த சமையல் குறிப்பினை வழங்கிய "Senthamil Selvi" அவர்களுக்கு நன்றி :)

பிளாக்ஸ் விதை ரொட்டி



தேவையான பொருட்கள்:
பிளாக்ஸ் விதை மாவு - 4 டேபிள்ஸ்பூன் 
தேங்காய் பவுடர் - 2 டேபிள்ஸ்பூன் 
சீரகம்  - 1 டீஸ்பூன் 
ஆலிவ் ஆயில் - கொஞ்சம் 
Xanthan gum - 1 டீஸ்பூன் 
Self raising flour 1 tsp (to roll)(gluten free self raising flour)

செய்முறை: 
* சீரகத்தை சிறிது எண்ணெய் விட்டு வறுத்து மாவில் சேர்க்கவும்.
* self raising flour தவிர மற்ற தேவையான  பொருட்களை நன்கு கலக்கவும்.
* கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து மாவினை பிசையவும்.
* மாவினை சப்பாத்தி போன்று உருட்டும் போது Self raising flour உபயோகப்படுத்தவும்.
* கல்லில் சப்பத்தினை சுட்டு எடுக்கவும் 

இந்த சுவையான சமையல் குறிப்பினை வழங்கிய "Sangeetha Vageesan"அவர்களுக்கு நன்றி :)




Monday, February 23, 2015

தக்காளி சூப்



தேவையான பொருட்கள்:
வெங்காயம்
தக்காளி
வெள்ளரிக்காய்
தேங்காய் எண்ணெய்
உப்பு

செய்முறை:
* தக்காளி,வெங்காயம்,வெள்ளரிக்காய்,உப்பு இவைகளை தேங்காய் எண்ணெய் மற்றும் தண்ணீர் சேர்த்து வேகவைத்து அரைக்கவும்.
* தக்காளி சூப் ரெடி.

இந்த சுலபமான,சுவையான சமையல் குறிப்பினை வழங்கிய "Tharshini jeeva" அவர்களுக்கு நன்றி :)


சிக்கன் டிக்கா






தேவையான பொருட்கள்:
எழும்பில்லா சிக்கன் - 20 சிறு துண்டங்கள்
சதுரமாக வெட்டிய குடை மிளகாய் (மஞ்சள்,பச்சை,சிவப்பு) - ஒவ்வொன்றிலும் 1
சதுரமாக வெட்டிய வெங்காயம் - 1
கபாப் குச்சி

ஊறவைக்க தேவையான மசாலா: 
மஞ்சள் தூள்
மல்லித்தூள்
சீரகத்தூள்
மிளகாய் தூள்
பூண்டு மற்றும் வரமிளகாய் அரைத்த விழுது
உப்பு
தயிர்
எழுமிச்சை சாறு


செய்முறை Grill pan method: 
* மேலே குறிபிட்ட, ஊறவைக்கத்  தேவையான பொருட்களை நன்கு கலந்து, அதில் சிக்கன்,வெங்காயம்,குடைமிளகாய் கலந்து குளிர்சாதன பெட்டியில் குறைந்தது 2 மணிநேரம் ஊறவைக்கவும்.
* பின்பு புகைப்படத்தில் உள்ளது போல், கபாப் குச்சியில் சிக்கன்,வெங்காயம்,குடை மிளகாய் என்று கலந்து குத்தி வைக்கவும்.
* Grill pan சூடு செய்து அதில் இக்குச்சி வைத்து 4 பக்கமும் வேகவைத்து எடுக்கவும்.

செய்முறை oven method:
*  350 டிகிரி பாரன் ஹீட் (350 degrees fahrenheit) சூடேற்றி, காப்பினை வேக விடவும்.  சிறிது நேரத்திற்கு ஒருமுறை திருப்பிவிட்டு 20 நிமிடங்கள் வேகவிடவும்.
* கடைசியாக 3 நிமிடங்கள் பராயில் மோடில் வைத்து வேக விட்டு எடுக்கவும்.
* சுவையான சிக்கென் கபாப்  ரெடி.



குறிப்பு: மாமிசம் சாப்பிடாதவர்கள், வெங்காயம்,குடைமிளகாய்,பன்னீர் ,வெள்ளரி அல்லது சுஹினி,ஸ்குவாஷ் போன்ற காய்கள் மட்டுமே உபயோகப்படுத்தலாம்.

சமையல் குறிப்பு: Mythili Thiyagu




காரட் சீஸ் கேக் ..மைக்ரோ வேவ்



தேவையான பொருட்கள்:
ஐம்பது கிராம் பாதாம் ஊறவைத்து உலர்த்தி அரைத்த பொடி பிளஸ் ஒரு டீஸ்பூன் பேகிங் பௌடேர் கலந்து வைக்கவும் 
ஐம்பது கிராம் வெண்ணெய் 
ஐம்பது கிராம் சீஸ் ஸ்ப்ரெட் 
முட்டை ஆப்ஷனல் 
ஆறு சிவந்த காரட் அரைத்த விழுது 
லவங்க பொடி ஒரு ஸ்பூன் 

முதலில் ஒரு பேக்கிங் டிஷ் எடுத்து அதை கிரீஸ் செய்யவும் .
முதல் லேயராக அரைத்த காரட் விழுதில் கால் பங்கு மற்றும் சீஸ் ஸ்ப்ரெட் நன்றாக கலந்து ஸ்ப்ரெட் செய்யவும் ..


கொஞ்சம் உருக்கிய வெண்ணையில் இரண்டு முட்டை அடித்து அதில் பாதாம் பொடி , லவங்க பொடி மற்றும் மீதமுள்ள காரட் விழுது நன்றாக கலந்து இரண்டாவது லேயாராக பரப்பவும் ...முட்டை தவிர்க்க வெண்ணெய் கொஞ்சம் அதிகமாக போடலாம் ....இந்த கலவையை மைக்ரோ ஓவன்ல் இருபது நிமிடம் வைத்து பின் கன்வெக்ஷன் மோடில் ஒரு ஐந்து நிமிடம் வைத்து எடுக்கவும் ..ஸ்வீட் தேவை என்றால் காரட் கலவையுடன் கொஞ்சம் பனை வெல்லம்சேர்க்கவும் ..

இந்த சுவையான காரட் சீஸ் கேக் சமையல் குறிப்பினை வழங்கிய அம்மா "Dolly Bala" அவர்களுக்கு நன்றி :)

Friday, February 20, 2015

ZUCCHINI DELIGHT IN TOMATO AND CHEESE SAUCE




தேவையான பொருட்கள்:

சின்ன துண்டுகளாக நறுக்கிய zucchini - 1
நீள வாக்கில் மெல்லிதாக நறுக்கிய வெங்காயம் - 1 
விழுதாக அரைத்த  தக்காளி - 1  
வெண்ணெய் - 50 கிராம்
 துருவிய கெட்டி சீஸ் ( Cheddar cheese)  - 50 க்ராம்
மிளகுத்தூள் - 1 டேபிள் ஸ்பூன் 
மிளகாய்த்தூள் - 1  டீஸ்பூன்
ஏதாவது ஹெர்ப்ஸ் - கொஞ்சம்
தேங்காய் பால் - 1 கப் 
முந்திரி - 5 அரைத்த விழுது 
உப்பு
கொத்தமல்லி

செய்முறை:
* நறுக்கிய zucchini யை கொஞ்சம் வெண்ணெய் , உப்பு சேர்த்து கிரில் செய்யவும்
அதே போல வெங்காயம் வெண்ணெய் சேர்த்து கிரில் செய்யவும் .
கிரில் இல்லையென்றால் வாணலியில் தனியாக வதக்கலாம்.
* அரைத்த தக்காளி விழுதுடன் மிளகாய் தூள் , உப்பு கலந்து கொஞ்சம் வெண்ணெய் விட்டு வதக்கி வைக்கவும் (தக்காளி சாஸ் ).* வாணலியில் கொஞ்சம் வெண்ணெய் சேர்த்து அரைத்த முந்திரி விழுதை வதக்கி அதில் துருவிய சீஸ் மற்றும் தேங்காய் பால் சேர்த்து கொஞ்சம் உப்பு ,மிளகுத்தூள் போட்டு ஒரு கொதி வந்தவுடன் இறக்கி விடவும் ....( சீஸ் சாஸ் ).
* ஏதாவது ஹெர்ப்ஸ் கொஞ்சம் ..நான் போட்டது Herbs de Provence ..which is a combination of
savory, marjoram, rosemary, thyme, oregano
* ஒரு டிஷ்ல் முதலில் இந்த சீஸ் சாஸ் கலவை , அதன் மேல் கிரில் செய்த zucchini, அதன் மேல் கிரில் செய்த வெங்காயம் , என்று அடுக்கி மேலே தக்காளி சாஸ் விட்டு கொத்தமல்லி தழை அலங்கரித்து அதன் மேலே கொஞ்சம் ஹெர்ப்ஸ் தூவி அலங்கரிக்கவும்.
* சாப்பிடும் முன் எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கவும் .
This is a Side Dish ...But Main Dish for us.


ZUCCHINI DELIGHT IN TOMATO AND CHEESE SAUCE: இந்த சுவையான,புதுமையான பேலியோ சமையல் குறிப்பினை வழங்கிய அம்மா "Dolly Bala" அவர்களுக்கு நன்றி :)



Tuesday, February 17, 2015

பரங்கிக்காய் திக் கிரேவி


தேவையான பொருட்கள்:
பரங்கிக்காய் 
தெங்காய் எண்ணை 
இஞ்சி 
கடுகு 
தேங்காய் 
தேங்காய் பால் 
மஞ்சள்தூள்
உப்பு 

செய்முறை:
பரங்கிக்காயை கொஞ்சம் பெரிய துண்டுகளாய் வெட்டிக்கொண்டு அதை ஒரு வாணலியில் சிறிது தேங்காய் எண்ணெய் விட்டு நன்றாக வேகும்வரை வதக்கி கொள்ளவும் ..கொஞ்சம் கொஞ்சமாக அதன் மேல் தண்ணீர் தெளித்து வேகவிட வேண்டும் ... வெந்த காயில் கொஞ்சம் இஞ்சி , கடுகு , தேங்காய் மூன்றையும் சேர்த்து அரைத்து விட்டு கொஞ்ச நேரம் கொதிக்கவிட்டு பின் அதில் ஒரு தேங்காய் உடைத்து துருவி கெட்டி பால் எடுத்து அதனுடன் சேர்த்து ஒரு கிளறு கிளறிவிட்டு உப்பு , மஞ்சள்தூள் சேர்த்து பின் உடனே இறக்கி வைக்கவேண்டும்



Friday, February 13, 2015

கோழி ரசம்



தேவையான பொருட்கள்:
கோழி சிறு துண்டுகள் (எழும்புடன்) - 10 எண்
வெங்காயம் - 10 சின்னது அல்லது 1/2 பெரியது
தக்காளி - 1
பூண்டு  - 5 பல்
கறிவேப்பிலை - 1 கொத்து
பட்டை - 1"
கிராம்பு - 2
ஏலக்காய்  - 2
பிரியாணி இலை - 1
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி இலை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

அரைக்க: 
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 10
சோம்பு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1
கறிவேப்பிலை - 2 இலை

செய்முறை:
* கோழியை மஞ்சள் தூவி, சுத்தம் செய்தும் மற்றும் அரைக்க கொடுத்த பொருட்களை அரைத்தும் தயாராக வைக்கவும்.
* மேலே கூறிய அனைத்தையும் (தேவையான பொருட்கள் + அரைத்த விழுது) ஒரு குக்கரில் ஒன்றாக கலக்கி, 2 கப் தண்ணீர் உற்றி 4 டு 5 விசில் விட்டு இறக்கவும்.இத்துடன் கொத்தமல்லி இலை சேர்த்து பரிமாறவும்.

நெஞ்சு சளி இருந்தால், உடைத்துக்கொண்டு வெளியே வந்துடும்.

குறிப்பு: இந்த சமையல் குறிப்பினை ஸ்லொவ் குக்கரிலும் செய்யலாம்.


சமையல் குறிப்பு: Mythili Thiyagu






Thursday, February 12, 2015

டூனா மீன் புட்டு


தேவையான பொருட்கள்: 
மீன் 
வெண்ணை
கடுகு
சோம்பு 
பெரிய வெங்காயம் 1
.மிளகாய் 2
பூண்டு 6 பல்
மஞ்சள் தூள்
மிளகுத் தூள்
கருவேப்பில்லை
மல்லியிலை
தேங்காய் துருவல் ஸ்பூன்
உப்பு

செய்முறை:

கடாயில் வெண்ணை போட்டு கடுகு, சோம்பு தாளித்தப் பின் பெரிய வெங்காயம் 1, .மிளகாய் 2, பூண்டு 6 பல் இவற்றை பொடியாக நறுக்கி வதக்கவும். வெங்காயம் வதங்கியபின், ஏற்கனவே கழுவி வைத்துள்ள மீனை போட்டு நன்கு கிளறவும்.மஞ்சள் தூள் சேர்க்கவும். கருவேப்பில்லை, மல்லியிலை சேர்க்கவும். ருசிக்கேற்ப உப்பு போடவும். மீனில் நீர் வற்றி உதிரி,உயிரியாக ஆனபின் காரத்திற்கேற்ப மிளகுத் தூள் சேர்தது அடுப்பிலிருந்து இறக்கவும். பின், 4 ஸ்பூன் தேங்காய் துருவல் போட்டு கிளறவும். இப்போது டூனா மீன் புட்டு ரெடி. இதன் ருசி அலாதியாக இருந்தது.

டூனா மீன் புட்டு: இந்த சுவையான சமையல் குறிப்பினை வழங்கிய "Barani Devi Jayaprakash" அவர்களுக்கு நன்றி.

மிக்ஸ்ட் வெஜிடபிள் அடை





தேவையான பொருட்கள் :
1. வேக வைத்த சர்க்கரைவள்ளி கிழங்கு ஒன்று ..... நன்றாக மசித்து வைக்கவும்
2
முள்ளங்கி இரண்டு , காரெட் ஒன்று ,
வெங்காயம் இரண்டு இவை துருவியது
3.
பச்சை மிளகாய் நான்கு , இஞ்சி ஒரு துண்டு
அரைத்து வைக்கவும்
4 மிளகு இரண்டு டேபிள் ஸ்பூன் பொடித்தது , பிளாக்ஸ் பொடி ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு தேவையான அளவு 1,2,3,4, . ..இவை எல்லாவற்றையும் ஒன்றாக கெட்டியாக பிசைந்து கொள்ளவும்
5..
நெய் அல்லது வெண்ணெய்

செய்முறை:

ஒரு வாழை இலை அல்லது பொலிதீன் ஷீட்ல இந்த பிசைந்த கலவையை தேவையான அளவு உருட்டி கையால் அடை போல தட்டி ஒரு நான்- ஸ்டிக் தவா வில் நெய் அல்லது வெண்ணெய் விட்டு சிறிய தீயில் நிதானமாக இரண்டு பக்கமும் பொன்னிறமாக வரும்வரை வேகவைத்து எடுத்து வேண்டிய ஊறுகாய் அல்லது தேங்காய் சட்னியுடன் சாப்பிடவும்.

மிக்ஸ்ட் வெஜிடபிள் அடை: வாவ் என்று சொல்லக்கூடிய இந்த சுவையான, ஆரோக்கியமான சமையல் குறிப்பினை வழங்கிய அம்மா "Dolly Bala"அவர்களுக்கு நன்றி :)





வெங்காயத்தாள் தொடுகறி

தேவையான பொருட்கள்: 
முற்றிய வெங்காயத்தாள்
வறுத்த நிலக்கடலை (பேலியோ அல்ல )
மஞ்சள் தூள்
உப்பு

வறுத்து பொடிக்க:
வரமிளகாய்
தனியா
சீரகம்
மிளகு

செய்முறை:

முற்றிய வெங்காயத்தாள்களை சுத்தம் செய்து நறுக்கி தாளித்து, கொஞ்சம் மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து, சிறிது நீர் தெளித்து வேக விடவும்.

வரமிளகாய், தனியா, சீரகம் மிளகு, கறிவேப்பிலையை எண்ணெயிட்டு வறுத்து, பொடியாக்கி, அதனோடு வறுத்த நிலக்கடலை போட்டுப் பொடியாக்கி தாள் வெந்ததும் இந்தத் தூளைத் தூவி இறக்கவும். எதனோடும் இணையும் டேஸ்ட்டி டேஸ்ட்டி யம்மி யம்மி தொடுகறி தயார்.

வெங்காயத்தாள் தொடுகறி: இந்த புதுமையான,சுவைமிகுந்த பேலியோ சமையல் குறிப்பினை வழங்கிய "Vijayapriya Panneerselvam" அவர்களுக்கு நன்றி  :)

Wednesday, February 11, 2015

காலிஃபிளவர் உப்புமா





பாதி காலிஃபிளவர பொடியா நறுக்கி மிக்சியிலோ () food processorலையோ போட்டு துருவின மாதிரி பண்ணிக்கணும். ரெண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, .பருப்பு, சீரகம் போட்டு தாளிக்கணும். பொடியா நறுக்கின சிவப்பு வெங்காயம்+பச்சை மிளகாய் வதக்கணும். வதங்கின பிறகு காலிஃபிளவர போட்டு அது வேகுற வரைக்கும் வதக்கணும். எறக்குறதுக்கு முன்னாடி, மஞ்சள்தூள், கருவேப்பிலை, துருவின இஞ்சி, உப்பு போட்டு கிளறினா போதும்.

காலிஃபிளவர் உப்புமா - இந்த சுவையான சமையல் குறிப்பினை வழங்கிய "Swarnalatha Kuppa"அவர்களுக்கு நன்றி :)

காலி பிளவர் - முட்டை பொரியல்





காலி பிளவரை சிறு சிறு துண்டுகளாக்கி சுடு தண்ணீரில் மஞ்சள் உப்பு கலந்து 5 நிமிடம் வைக்கவும். பிறகு காரட் துருவியில் துருவிக்கொள்ளவும். வழக்கம்போல் முட்டை பொரியல் செய்யும் முறையில், வெங்காயம் தக்காளியுடன், துருவிய காலி பிளவரை சேர்த்து வதக்கவும்.. உப்பு, மிளகுத்தூள் , சேர்க்கவும். நன்றாக வதங்கியதும் , முட்டைகளை உடைத்து ஊற்றவும் .. முட்டை நன்றாக வறுத்ததும், சிறிது மஞ்சள் தூள் தூவி கிளறிவிடவும். சுவையான காலி பிளவர் - முட்டை பொரியல் தயார். ( நான் பூண்டு கொத்தமல்லி சேர்த்தேன். விருப்பம் உள்ளவர்கள் சேர்த்துக்கொள்ளவும் ) .. முதல் முறை செய்தேன். நன்றாக இருந்தது.

காலி பிளவர் - முட்டை பொரியல் - இந்த சுவையான, புதிய முறையில் சமையல் குறிப்பினை வழங்கிய "Gnana Vadivel S" அவர்களுக்கு நன்றி :)

Tuesday, February 10, 2015

பேலியோ வாழைப்பழ கேக்




ஐம்பது க்ராம் பாதாம்  தண்ணீரில் ஊரவைத்து துடைத்து நன்றாக காய்ந்தவுடன்  மிக்சியில் மாவாக அறைத்துக் கொள்ளவும்.. அதில் அரை டீஸ்பூன் பேகிங் பௌடர் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.....2 முட்டை உடைத்து அடித்து வைத்துக் கொள்ளவும் நன்கு பழுத்த இரண்டு வாழைப்பழம் அதையும் மிக்சியில் அடித்து வைத்த்கொள்ளவும். நூறு க்ராம் வெண்ணை ஒரு பேக்கிங் டிஷ்ல் வைத்து மைக்ரோவேவ் ஒவென்ல் உருக்கி அதில் மேலே சொன்ன எல்லாவற்றையும் அதில் நன்றாக கலந்து மைக்ரோ மோடில் இருபது நிமிடம் வைத்து பின் 240 டிக்ரியில் கன்வெக்ஷன் மோடில் ஐந்து நிமிடம் வைத்து வெளியே எடுத்து டெகரேட் செய்யவும..

இந்த சுவையான வாழைப்பழ கேக் சமையல் குறிப்பினை வழங்கிய அம்மா "Dolly Bala" அவர்களுக்கு நன்றி :)

இஞ்சித் துவையல்



தேவையான பொருட்கள்:

இஞ்சி 
மிளகாய் வற்றல்
தேங்காய் துருவல்
புளி
உப்பு
தாளிக்க 
கடுகு
உளுத்தம்பருப்பு
நல்லெண்ணெய்

செய்முறை:

வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு மிளகாய் வற்றல் சேர்த்து வறுக்கவும்

தேங்காய் துருவலை நன்கு பொன் நிறமாக வறுக்கவும்

பின் பொடியாக நறுக்கிய இஞ்சியையும் நன்கு வறுக்கவும்
பின் மிக்ஸியில் வறுத்த மிளகாய் வற்றல், தேங்காய் துருவல், இஞ்சி, புளி, உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும்


பின் வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு ,கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்த விழுதை சேர்த்து கிளறி பரிமாறவும்.


இந்த சுவையான துவையல் சமையல் குறிப்பினை வழங்கிய "Shanthi Pettai" அவர்களுக்கு நன்றி :)

பேலியோ சொதி



தேவையானவை:
தேங்காய்
கேரட்  உருளைக்கிழங்கு
காலிபிளவர்
முருங்கைக்காய்
சின்ன வெங்காயம்
பூண்டு
மற்றும் 
பச்சைமிளகாய்
மல்லித்தழை
எலுமிச்சைச்சாறு
இஞ்சி
முந்திரிப் பருப்பு
சீரகம்
நெய்

செய்முறை:

தேங்காய்துருவி கெட்டி பாலாக எடுக்கவும்

பூண்டு, வெங்காயம் வதக்கி காய்கறித்துண்டுகளோடு  சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்

பச்சைமிளகாயை வதக்கி அரைக்கவும்.

 இஞ்சியை சாறு எடுத்து வைக்கவும்

 முந்திரிப் பருப்பை வெந்நீரில் ஊறவைத்து நைசாக அரைத்துக் கொள்ளவும்

வாணலியில் நெய் விட்டு சீரகம், முந்திரிப் பருப்பு வறுத்து தனியாக வைக்கவும்

வாணலியில் வேகவைத்த காய்கறிகள், அரைத்த மிளகாய் விழுது  , உப்பு சேர்த்து  கொதிக்க விடவும்

பின் தேங்காய் பால் முந்திரி விழுது சேர்த்து சில நிமிடங்கள் சூடாக்கவும்

பின் இஞ்சி சாறு சேர்த்து அடுப்பை அணைக்கவும்

பின் எலுமிச்சை சாறு, உப்பு, தாளித்த சீரகம், முந்திரிப் பருப்பு, பொடியாக நறுக்கிய மல்லித்தழை சேர்த்து சூடாகப் பரிமாறவும்

குறிப்பு - தேங்காய் பால் சேர்த்த பிறகு நன்கு சூடாக்க மட்டுமே செய்யவும். கொதிக்க விடக் கூடாது.  

காலிபிளவரை சுடுநீரில் போட்டு தனியாக வேக வைத்து சேர்க்கவும்.


இந்த அருமையான,சுவையான சமையல் குறிப்பினை வழங்கிய "Shanthi Pettai"அவர்களுக்கு நன்றி :)

Saturday, February 7, 2015

தண்டுக்கீரை பொரியல்



தேவையான அளவு கீரையை நன்கு சுத்தம் செய்து  பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், ஒரு மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். அதோடு  அரிந்த வெங்காயம் மற்றும் பூண்டு பல்  சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் அரிந்த கீரையை போட்டு உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும். கீரை வதங்கியதும் வாணலியை அடுப்பில் இருந்து இறக்கி கீரையோடு தேங்காய் துருவல் சேர்த்து உண்ணலாம்.

இந்த சமையல் குறிப்பினை வழங்கிய "Shanthi pettai" அவர்களுக்கு நன்றி :)

Friday, February 6, 2015

பேலியோ பிரட்




தேவையான பொருட்கள்:
பாதாம் மாவு - 1 கப்
தேங்காய் மாவு - 1 டீஸ்பூன்
பேக்கிங் பொடி  - 1 டீஸ்பூன்
தேங்காய் / ஆலிவ் எண்ணெய் - 1/2 கப்
முட்டை - 2
உப்பு - மிகவும் சிறிதளவு

செய்முறை:

* முட்டையை நன்கு அடித்துக்கொள்ளவும், பின்பு அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்றாக கலக்கி, சூடாக இருக்கும் ஓவனில் (350 degree fahrenheit) வைத்து 30 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.


இந்த சமையல் குறிப்பினை வழங்கிய "Rajakhan Mohamed" அவர்களுக்கு நன்றி :)

புகைப்படம்: Mythili Thiyagu

கேரளா முட்டை ரோஸ்ட்



தேவையான பொருட்கள்:
வேகவைத்த முட்டை - 4
தேங்காய் எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - சிறிதளவு
நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் - 3
நீளவாக்கில் நறுக்கிய  தக்காளி - 1
நீளவாக்கில் இரண்டாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - கொஞ்சம்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
* ஒரு கடாயில்  தேங்காய் எண்ணெய்  காயவைத்து கடுகு தூவவும். கடுகு பொரிந்ததும் வெங்காயம், சிறிது உப்பு சேர்த்து, வெங்காயம் சுருளும் வரை வதக்கவும்.
* வெங்காயம் நன்கு சுருண்டு வதங்கிய பின் கீறிய பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
* இப்பொழுது மிளகாய்த்தூள்,மல்லித்தூள்,மிளகுத்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
* நறுக்கிய தக்காளியை இத்துடன் சேர்த்து, எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
* வேகவைத்து,தோலுறித்த முட்டையை நான்கு புறம் கீறி, இந்த மசாலாவுடன் சேர்த்து நன்கு பிரட்டவும்.
* சுவையான, காரமான கேரளா முட்டை ரோஸ்ட் ரெடி.

சமையல் குறிப்பு: Mythili Thiyagu





மசாலா முட்டை பன்னீர் புர்ஜி



முட்டை புர்ஜி , பன்னீர் புர்ஜி தனியாக செய்து அலுத்துவிட்டது ..இன்று இரண்டையும் ஒன்றாக செய்தேன் 

தேவையான பொருட்கள்:

ஒரு வெங்காயம் பொடியாக நறுக்கியது , பச்சை மிளகாய்  நான்கு பொடியாக , சோம்பு , வெண்ணெய் நூறு கிராம்  , உப்பு , பன்னீர் இருநூறு கிராம்  துருவியது  , முட்டை நான்கு உடைத்து அடித்துவைக்கவும் ., மசாலா தூள் ஒரு ஸ்பூன் மிளகாய்  தூள்  ஒரு ஸ்பூன் , கொத்தமல்லி தழை 

செய்முறை:
* ஒரு வாணலியில் வெண்ணெய் போட்டு அது உருகியவுடன் சோம்பு அதில் போடவேண்டும் ..உடனே வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி பன்னீர் மற்றும் முட்டைக்கு அளவாக உப்பு, மசாலா தூள், மிளகாய் தூள்   சேர்த்து பின் அதில் துருவிய பன்னீர் சேர்த்து நன்றாக வதக்கி பின் உடைத்த முட்டையையும் சேர்த்து வதக்கி மேலே கொத்தமல்லி சேர்த்து சாப்பிடவும்.

இந்த புதிய சமையல் குறிப்பினை வழங்கிய அம்மா "Dolly Bala" அவர்களுக்கு நன்றி :)

Thursday, February 5, 2015

ப்ரோபயாடிக் எலுமிச்சை ஊறுகாய்




20 பெரிய எலுமிச்சம்பழங்களை எடுத்துகொள்ளவும். 12 பழங்களை நன்றாக துண்டாக நறுக்கி ஜாடியில் இடவும். மீதமுள்ள பழங்களைப்பிழிந்து அந்த ஜூஸை ஜாடியில் ஊற்றி, தோலை அதே ஜாடியில் இடவும். பலரும் எலுமிச்சை ஜூஸுக்கு பதில் வினிகரை ஊற்றுவார்கள் எனினும் எலுமிச்சை ஜூஸே வினிகரை விட சிறப்பு வாய்ந்தது. கனி இருக்க காய்கவர்வதேன்?
இதன்பின் 150 கிராம் உப்பை ஜாடியில் போட்டு நன்றாகக்கலக்கவும். இதில் மிளகாய்ப்பொடி, மஞ்சள் சேர்த்தால் ஊறுகாய், அது ஆப்ஷனலே. அதனால் காரத்தின் அளவுக்கு ஏற்ப மஞ்சளும், மிளகாய்ப்பொடியும் சேர்க்கவும். பாரம்பரிய ஊறுகாயில் இதன் மேல் கொதிக்கும் நல்லெண்னயை ஊற்றுவார்கள், அல்லது நல்ல வெயிலில் 10 நாள் காயவிட்டு ப்ரொபயாடிக் பாக்ட்ரியாக்களைக்கொன்றுவிடுவார்கள். நாம் அத்தவறை எல்லாம் செய்யவேண்டியதில்லை. மிளகாய்ப்பொடியும், மஞ்சளும் சேர்த்து நன்றாக கலக்கி அப்படியே பாத்திரத்தை ப்ரிட்ஜில் வைத்துவிடவேண்டியதுதான்
இனிநாள்பட, நாள்பட அதில் ப்ரொபயாடிக் பேக்ட்ரியா காலனி உருவாகிக்கொண்டே வரும். அதை உண்ண உங்கள் பெரும்குடல் பலம் பெறும். ஆனால் வெறும் வயிற்றில் உண்னவேண்டாம். உனவுடன் உட்கொள்ளுங்கள்
வீட்டில் செய்த ப்ரொபயாடிக் எலுமிச்சை ஊறுகாய்.

குறிப்பு: ப்ரோபயாடிக் ஊறுகாய்
ப்ரோபயாடிக் என்றால் என்னன்னு பார்த்தால் ஒரு உனவுப்பொருளை பெர்மெண்ட் செய்தால் அதில் நலமளிக்கும் பாக்டிரியாக்கள் உருவாகும். உதாரணமாக ப்ரொபயாடிக் கபிர் தயிரில் அத்தயிரை ஜீரணிக்கும் சக்தியுள்ள பாக்டிரியா காலனிகள் உருவாகின்றன. அதை உண்டால் அவை நம் வயிற்றுக்குள் சென்று அங்கே வாழ்கின்றன. இதன்பின் நாம் உண்ணும் உணவில் ஜீரணிக்க முடியாத பகுதிகள் பெரும்குடலுக்குச்செல்கின்றன. உதாரணமாக நார்ச்சத்து. இதை இந்த பாக்டிரியாக்கள் உன்டு ஜீரணம் செய்து நம் மலம், கழிவுகள் முதலானவற்றை சிக்கலின்றி வெளிவரச்செய்கின்றன. பெரும்குடல் என்பது மனிதனின் இரண்டாம் மூளை. அதில் உள்ள பாக்டிரியாக்களின் நலனே நம் நலன். இந்த பாக்டிரியாக்களுக்கு உணவின்றி அழிந்தால் நம் பெரும்குடல் சரிவர இயங்காது. நாமும், இத்தகைய ப்ரோபயாடிக் பாக்டிரியாக்களும் இப்படி ஒரு விந்தையான பரிணாம உறவுடன் உள்ளோம்.
உணவில் ப்ரொபயாடிக் பாக்டிரியாவை உண்டாக்க கெபிர் தயிரை உண்னவேண்டும் என்பது நமக்கு தெரியும். ஆனால் அதுபோக இயற்கையில் பெர்மெண்ட் செய்த எந்த உனவுப்பொருளிலும் ப்ரோபயாடிக் பாக்ட்ரியாக்கள் உருவாகும். அவையாவன
கொரிய கிம்சி,
ஜப்பானியா நாட்டோ
ஜெர்மானிய சவர்க்ராட் முதலானவை
பெர்மென்டேஷன் என்பது உப்பு அல்லது வினிகர் மூலம் ஒரு உனவுப்பொருளை நாள்படப்பாதுகாத்து, அதை பாக்டிரியா, ஈஸ்ட் மூலம் முறித்து அதில் கெமிக்கல் மாற்றத்தை உருவாக்குவதே. ஒயின், ரொட்டி எல்லாம் பெர்மெண்டேஷன் மூலம் தான் தயாராகின்றன. ஆனால் உயர்வெப்பத்தில் சூடாக்குவதால் ரொட்டியில் ப்ரோபயாடிக் பாக்டிரியா உருவாவதில்லை. ஒயினை சூடாக்குவதில்லை எனினும் அதில் உருவாகும் ஆல்கஹால் பாக்டிரியாக்கலை அழித்துவிடுகிறது. காரணம் ஆல்கஹால் ஒரு சிறந்த கிருமிநாசினி smile emoticon
ஆக நம் வயிற்றில் ப்ரொபயாடிக் பாக்டிரியா செழித்து வளர நாம் கெபிர் தயிர், கிம்சி, நாட்டோ, சவர்க்ராட் சாப்பிடணும் என சொன்னால் நம் ஊரில் நம்மை அடிக்க வருவார்கள் smile emoticon இதெல்லாம் எந்த நாட்டு உணவு? தமிழ்நாட்டுக்கு என்ன வழி? தமிழ்நாட்டு உணவில் ப்ரொபயாடிக் பாக்டிரியா இல்லையா?
இருக்கு..ஆனால் இல்லை..டென்சனாகவேண்டாம் smile emoticon அதாவது நம் ஊர் ஊறுகாய் தான் கிம்சி, சவர்க்ராட் எல்லாம். ஆனால் ஊறுகாய்க்கும் இதுக்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில் ஊறுகாயை உயர்வெப்பத்தில் எண்னெயில் வணக்குகையில் அதில் ப்ரொபயாடிக் பாக்ட்ரியா உருவாவதில்லை. ஆக ஊறுகாயை வெப்பமின்றி செய்தால் அதில் ப்ரொபயாடிக் பாக்ட்ரியாக்கள் உருவாகும். நாம் அதன்பின் கெபிர் தயிர் எங்கே கிடைக்கும், நாட்டோ எங்கே கிடைக்கும் என அலையவேண்டியதில்லை - Neander Selvan

இந்த ஆரோக்கியமான உணவின் செய்முறை குறிப்பினை வழங்கிய "Neander Selvan" அவர்களுக்கு நன்றி :)

பன்னீர் பச்சைபட்டாணி உருளை சீஸ் பேக்



உருளை ,பட்டாணி பேலியோ இல்லை என்பவர்கள் காரட் , முட்டைகோஸ் சேர்த்துக் கொள்ளவும் ..வாரியர் உணவுக்கு இது ஓகே
தேவை ..உருளை ஒன்று , கொஞ்சம் பச்சை பட்டாணி , பன்னீர் நூறு கிராம் , வெங்காயம் ஒன்று , தக்காளி ஒன்று , பூண்டு இஞ்சி , பச்சைமிளகாய் , மிளகு பொடி , துருவிய சீஸ் , வெண்ணெய் , முந்திரி பருப்பு பத்து .. .உப்பு தேவைக்கு
உருளை , பட்டாணி இரண்டையும் நன்றாக வெண்ணையில் வதக்கி கொள்ளவும் .
வெங்காயம் , தக்காளி நீரில் வேகவைத்து அதை நன்றாக அரைத்து வைக்கவும்
பூண்டு , இஞ்சி , பச்சைமிளகாய் விழுதாக அரைத்து கொள்ளவும்
முந்திரி பருப்பு பத்து நீர் விட்டு கெட்டியாக அரைக்கவும்
ஒரு வாணலியில் வெண்ணெய் போட்டு அதில் அரைத்த வெங்காய விழுது , பூண்டு விழுது சேர்த்து வதக்கி கொஞ்சம் நீர் விட்டு பச்சை மணம் போக கொதிக்கவைக்கவும் ..பிறகு அதில் அரைத்த முந்திரி மற்றும் பன்னீர், உப்பு சேர்த்து கொஞ்சம் கெட்டியாகும் வரை கொதிக்கவிட்டு மேலே மிளகு பொடி தூவிவிடவும்
ஒரு வெண்ணெய் தடவிய பேக்கிங் டிஷ்ல முதல் லேயர் உருளை பட்டாணி வதக்கியது ..இதை நன்றாக விழுதாக அரைத்தும் செய்யலாம் ..ஆனால் நான் அப்படி செய்யவில்லை ..அதற்க்கு மேல் பன்னீர் லேயர் ,மேலே துருவிய சீஸ் சேர்த்து இருபது நிமிடங்கள் பேக்கிங் ஓவன் அல்லது மைக்ரோ ஓவன்ல் கிரில் /கன்வெக்ஷன் மோடில் இருபது நிமிடம் வைத்து எடுக்கவும் ..

இந்த சமையல் குறிப்பினை வழங்கிய அம்மா "Dolly Bala"அவர்களுக்கு நன்றி :)





Wednesday, February 4, 2015

நெல்லிக்காய் துவையல்



தேவையான பொருட்கள்:

நெல்லிக்காய் 
இஞ்சி 
பூண்டு 
பெருங்காயம் 
காந்தாரி மிளகாய் 
உப்பு 

செய்முறை:

முதலில் நெல்லிக்காய்களை அவித்து எடுத்து ஆற வைத்து கொட்டைகளை நீக்கி விட்டு மிக்சியில் இட்டு அதனுடன் உப்பு,இஞ்சி ,பூண்டு,காயம் ,காந்தாரி மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.

நெல்லிக்காய்  துவையல் - இந்த ஆரோக்கியமான சமையல் குறிப்பினை வழங்கிய "Fasalul Huck" அவர்களுக்கு நன்றி :)

மற்றொருமுறை:
சமைக்காமலேயே நெல்லிக்காய் துவையல் செய்முறையை நண்பர் பகிர்ந்திருந்தார், அருமையான சுவையாகவும் இருந்தது

ரெசிபி:

நெல்லிக்காய் துவையல்
250 கிராம் முழு நெல்லிக்காய்களை நறுக்கி கொட்டைகளை நீக்கவும். சிறிது நேரம் நறுக்கிய நெல்லிக்காய்களை தண்ணீரில் ஊறவைத்து, 5 பல் பூண்டின் தோலை நீக்கவும். 20 கிராம் இஞ்சித் தோலை நீக்கி நறுக்கி எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து அரைக்கவும். இதனுடன் மிளகுத்தூள், பிளாக்சால்ட் சிறிதளவு சேர்த்துக் கலக்கவும்.
பலன்கள்:

ஊறுகாய்க்கு பதில் பயன்படுத்தலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. நன்றாகப் பசியெடுக்கும். அஜீரணக் கோளாறு விலகும். இளமையைத் தக்கவைக்கும். உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.

இந்த ஆரோகியமான "சமைக்காமலேயே நெல்லிக்காய் துவையல் " சமையல் குறிப்பினை வழங்கிய "Shankar ji"அவர்களுக்கு நன்றி :)