Wednesday, February 4, 2015

காலிஃ ப்ளவர் அடை/ரொட்டி



தேவையான பொருட்கள்:

  ஒரு காலிஃ ப்ளவர்ஒரு வெங்காயம் , பச்சை மிளகாய் , தேங்காய் துருவல் இஞ்சி , கொத்தமல்லி தழை , கரம் மசாலா தூள் , பிளாக்ஸ் சீட் பவுடர் ஒரு டேபிள்ஸ்பூன் , உப்பு 

செய்முறை:
* காலிஃப்ளவர் பெரிய துண்டுகளாக நறுக்கி நல்லா கிளீன் செய்து ஒரு ஐந்து நிமிடம் ஸ்டீம் வெச்சு எடுத்து blende/mixie போட்டு அரைத்து எடுக்கவும் .
* அதில் நறுக்கிய வெங்காயம் , பச்சை மிளகாய் , தேங்காய் துருவல் , இஞ்சி , கொத்தமல்லி , மசாலா தூள் , உப்பு , பிளாக்ஸ் சீட் பவுடர் போட்டு கெட்டியாக பிசைந்து வைக்கவும்.
*  ஒரு வாழையிலை அல்லது பாலிதீன் கவர்ல போளிக்கு தட்டுவதுபோல் லேசாக ரொட்டி போல தட்டவும் ..நான் ஸ்டிக் தவா வில் கொஞ்சம் வெண்ணெய் அல்லது நெய் விட்டு இந்த ரொட்டியை போட்டு  ஒரு தட்டினால் மூடிவைத்து நன்றாக வேகவிடவும்.
* இதை ஒரு பக்கம்தான் வேகவைக்க முடியும் ..திருப்பி போட்டால் உதிர்ந்து விடும் ..மேல்பக்கம் மூடி வைத்தால் மேல்பாகமும் வெந்துவிடும் அடுப்பை சிம் மட்டுமே வைக்கவும் ..கொஞ்சம் பொறுமை தேவை ..


காலிஃ ப்ளவர் அடை/ரொட்டி - இந்த சுவையான அடை சமையல் குறிப்பினை வழங்கிய அம்மா "Dolly Bala" அவர்களுக்கு நன்றி :)

No comments:

Post a Comment