தேவையானவை:
தேங்காய்
கேரட் உருளைக்கிழங்கு
காலிபிளவர்
முருங்கைக்காய்
சின்ன வெங்காயம்
பூண்டு
மற்றும்
பச்சைமிளகாய்
மல்லித்தழை
எலுமிச்சைச்சாறு
இஞ்சி
முந்திரிப் பருப்பு
சீரகம்
நெய்
செய்முறை:
தேங்காய் - துருவி கெட்டி பாலாக எடுக்கவும்
பூண்டு, வெங்காயம் வதக்கி காய்கறித்துண்டுகளோடு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
பச்சைமிளகாயை வதக்கி அரைக்கவும்.
இஞ்சியை சாறு எடுத்து வைக்கவும்.
முந்திரிப் பருப்பை வெந்நீரில் ஊறவைத்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் நெய் விட்டு சீரகம், முந்திரிப் பருப்பு வறுத்து தனியாக வைக்கவும்.
வாணலியில் வேகவைத்த காய்கறிகள், அரைத்த மிளகாய் விழுது , உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
பின் தேங்காய் பால் முந்திரி விழுது சேர்த்து சில நிமிடங்கள் சூடாக்கவும்.
பின் இஞ்சி சாறு சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
பின் எலுமிச்சை சாறு, உப்பு, தாளித்த சீரகம், முந்திரிப் பருப்பு, பொடியாக நறுக்கிய மல்லித்தழை சேர்த்து சூடாகப் பரிமாறவும்.
குறிப்பு - தேங்காய் பால் சேர்த்த பிறகு நன்கு சூடாக்க மட்டுமே செய்யவும். கொதிக்க விடக் கூடாது.
காலிபிளவரை சுடுநீரில் போட்டு தனியாக வேக வைத்து சேர்க்கவும்.
இந்த அருமையான,சுவையான சமையல் குறிப்பினை வழங்கிய "Shanthi Pettai"அவர்களுக்கு நன்றி :)
Potatoes cashews not allowed in Paleo
ReplyDelete