Tuesday, February 3, 2015

மிளகு மஷ்ரூம் வறுத்தது



செய்முறை விளக்கம்:

இது சாதரணமாக செய்யும் முறை ..மஷ்ரூமை எண்ணையில் பொரித்து விட்டு பின் அதனை உப்பு மிளகு சேர்த்து கடாயில் வறுப்பது ..நம் பேலியோவில் பொரிப்பது தவிர்ப்பதால் , முதலில் மஷ்ரூம் நம் தேவைக்கு ஏற்ப வெட்டிக்கொண்டு நன்றாக மண் போக கழுவி உப்பில் பிரட்டி பின் மைக்ரோஓவன்ல் கிரில் மோடில் இருபது நிமிடம் வைக்கவேண்டும் ..நீர் வற்றி மஷ்ரூம் நன்றாக காய்ந்தவுடன் அதனை ஒரு தட்டில் கொட்டிவிடவும் ..

பின் ஒரு கடாயில் தேவையான அளவு வெண்ணெய் சேர்த்து அதில் நறுக்கிய ஒரு வெங்காயம் , ஒரு காப்சிகம் , நாலு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி பின் அதில் மஷ்ரூம் இன்னும் சிறிது உப்பு சேர்த்து தேவையான அளவு மிளகு பொடிசெய்து மேலே தூவி , கொத்தமல்லி இலையும் தூவி சாப்பிடவும் ..


மிளகு மஷ்ரூம் வறுத்தது - இந்த அருமையான, புதுமையான சமையல் குறிப்பினை வழங்கிய அம்மா "Dolly Bala" அவர்களுக்கு நன்றி :)

No comments:

Post a Comment