தேவையான பொருட்கள்:
ஐம்பது கிராம் பாதாம் ஊறவைத்து உலர்த்தி அரைத்த பொடி பிளஸ் ஒரு டீஸ்பூன் பேகிங் பௌடேர் கலந்து வைக்கவும்
ஐம்பது கிராம் வெண்ணெய்
ஐம்பது கிராம் சீஸ் ஸ்ப்ரெட்
முட்டை ஆப்ஷனல்
ஆறு சிவந்த காரட் அரைத்த விழுது
லவங்க பொடி ஒரு ஸ்பூன்
முதலில் ஒரு பேக்கிங் டிஷ் எடுத்து அதை கிரீஸ் செய்யவும் .
முதல் லேயராக அரைத்த காரட் விழுதில் கால் பங்கு மற்றும் சீஸ் ஸ்ப்ரெட் நன்றாக கலந்து ஸ்ப்ரெட் செய்யவும் ..
கொஞ்சம் உருக்கிய வெண்ணையில் இரண்டு முட்டை அடித்து அதில் பாதாம் பொடி , லவங்க பொடி மற்றும் மீதமுள்ள காரட் விழுது நன்றாக கலந்து இரண்டாவது லேயாராக பரப்பவும் ...முட்டை தவிர்க்க வெண்ணெய் கொஞ்சம் அதிகமாக போடலாம் ....இந்த கலவையை மைக்ரோ ஓவன்ல் இருபது நிமிடம் வைத்து பின் கன்வெக்ஷன் மோடில் ஒரு ஐந்து நிமிடம் வைத்து எடுக்கவும் ..ஸ்வீட் தேவை என்றால் காரட் கலவையுடன் கொஞ்சம் பனை வெல்லம்சேர்க்கவும் ..
இந்த சுவையான காரட் சீஸ் கேக் சமையல் குறிப்பினை வழங்கிய அம்மா "Dolly Bala" அவர்களுக்கு நன்றி :)
No comments:
Post a Comment