தேவையான பொருட்கள்:
மீன்
வெண்ணை
கடுகு
சோம்பு
பெரிய வெங்காயம் 1
ப.மிளகாய் 2
பூண்டு 6 பல்
மஞ்சள் தூள்
மிளகுத் தூள்
கருவேப்பில்லை
மல்லியிலை
தேங்காய் துருவல் 4 ஸ்பூன்
உப்பு
செய்முறை:
கடாயில் வெண்ணை போட்டு கடுகு, சோம்பு தாளித்தப் பின் பெரிய வெங்காயம் 1, ப.மிளகாய் 2, பூண்டு 6 பல் இவற்றை பொடியாக நறுக்கி வதக்கவும். வெங்காயம் வதங்கியபின், ஏற்கனவே கழுவி வைத்துள்ள மீனை போட்டு நன்கு கிளறவும்.மஞ்சள் தூள் சேர்க்கவும். கருவேப்பில்லை, மல்லியிலை சேர்க்கவும். ருசிக்கேற்ப உப்பு போடவும். மீனில் நீர் வற்றி உதிரி,உயிரியாக ஆனபின் காரத்திற்கேற்ப மிளகுத் தூள் சேர்தது அடுப்பிலிருந்து இறக்கவும். பின், 4 ஸ்பூன் தேங்காய் துருவல் போட்டு கிளறவும். இப்போது டூனா மீன் புட்டு ரெடி. இதன் ருசி அலாதியாக இருந்தது.
டூனா மீன் புட்டு: இந்த சுவையான சமையல் குறிப்பினை வழங்கிய "Barani Devi Jayaprakash" அவர்களுக்கு நன்றி.
No comments:
Post a Comment