Thursday, February 5, 2015

ப்ரோபயாடிக் எலுமிச்சை ஊறுகாய்




20 பெரிய எலுமிச்சம்பழங்களை எடுத்துகொள்ளவும். 12 பழங்களை நன்றாக துண்டாக நறுக்கி ஜாடியில் இடவும். மீதமுள்ள பழங்களைப்பிழிந்து அந்த ஜூஸை ஜாடியில் ஊற்றி, தோலை அதே ஜாடியில் இடவும். பலரும் எலுமிச்சை ஜூஸுக்கு பதில் வினிகரை ஊற்றுவார்கள் எனினும் எலுமிச்சை ஜூஸே வினிகரை விட சிறப்பு வாய்ந்தது. கனி இருக்க காய்கவர்வதேன்?
இதன்பின் 150 கிராம் உப்பை ஜாடியில் போட்டு நன்றாகக்கலக்கவும். இதில் மிளகாய்ப்பொடி, மஞ்சள் சேர்த்தால் ஊறுகாய், அது ஆப்ஷனலே. அதனால் காரத்தின் அளவுக்கு ஏற்ப மஞ்சளும், மிளகாய்ப்பொடியும் சேர்க்கவும். பாரம்பரிய ஊறுகாயில் இதன் மேல் கொதிக்கும் நல்லெண்னயை ஊற்றுவார்கள், அல்லது நல்ல வெயிலில் 10 நாள் காயவிட்டு ப்ரொபயாடிக் பாக்ட்ரியாக்களைக்கொன்றுவிடுவார்கள். நாம் அத்தவறை எல்லாம் செய்யவேண்டியதில்லை. மிளகாய்ப்பொடியும், மஞ்சளும் சேர்த்து நன்றாக கலக்கி அப்படியே பாத்திரத்தை ப்ரிட்ஜில் வைத்துவிடவேண்டியதுதான்
இனிநாள்பட, நாள்பட அதில் ப்ரொபயாடிக் பேக்ட்ரியா காலனி உருவாகிக்கொண்டே வரும். அதை உண்ண உங்கள் பெரும்குடல் பலம் பெறும். ஆனால் வெறும் வயிற்றில் உண்னவேண்டாம். உனவுடன் உட்கொள்ளுங்கள்
வீட்டில் செய்த ப்ரொபயாடிக் எலுமிச்சை ஊறுகாய்.

குறிப்பு: ப்ரோபயாடிக் ஊறுகாய்
ப்ரோபயாடிக் என்றால் என்னன்னு பார்த்தால் ஒரு உனவுப்பொருளை பெர்மெண்ட் செய்தால் அதில் நலமளிக்கும் பாக்டிரியாக்கள் உருவாகும். உதாரணமாக ப்ரொபயாடிக் கபிர் தயிரில் அத்தயிரை ஜீரணிக்கும் சக்தியுள்ள பாக்டிரியா காலனிகள் உருவாகின்றன. அதை உண்டால் அவை நம் வயிற்றுக்குள் சென்று அங்கே வாழ்கின்றன. இதன்பின் நாம் உண்ணும் உணவில் ஜீரணிக்க முடியாத பகுதிகள் பெரும்குடலுக்குச்செல்கின்றன. உதாரணமாக நார்ச்சத்து. இதை இந்த பாக்டிரியாக்கள் உன்டு ஜீரணம் செய்து நம் மலம், கழிவுகள் முதலானவற்றை சிக்கலின்றி வெளிவரச்செய்கின்றன. பெரும்குடல் என்பது மனிதனின் இரண்டாம் மூளை. அதில் உள்ள பாக்டிரியாக்களின் நலனே நம் நலன். இந்த பாக்டிரியாக்களுக்கு உணவின்றி அழிந்தால் நம் பெரும்குடல் சரிவர இயங்காது. நாமும், இத்தகைய ப்ரோபயாடிக் பாக்டிரியாக்களும் இப்படி ஒரு விந்தையான பரிணாம உறவுடன் உள்ளோம்.
உணவில் ப்ரொபயாடிக் பாக்டிரியாவை உண்டாக்க கெபிர் தயிரை உண்னவேண்டும் என்பது நமக்கு தெரியும். ஆனால் அதுபோக இயற்கையில் பெர்மெண்ட் செய்த எந்த உனவுப்பொருளிலும் ப்ரோபயாடிக் பாக்ட்ரியாக்கள் உருவாகும். அவையாவன
கொரிய கிம்சி,
ஜப்பானியா நாட்டோ
ஜெர்மானிய சவர்க்ராட் முதலானவை
பெர்மென்டேஷன் என்பது உப்பு அல்லது வினிகர் மூலம் ஒரு உனவுப்பொருளை நாள்படப்பாதுகாத்து, அதை பாக்டிரியா, ஈஸ்ட் மூலம் முறித்து அதில் கெமிக்கல் மாற்றத்தை உருவாக்குவதே. ஒயின், ரொட்டி எல்லாம் பெர்மெண்டேஷன் மூலம் தான் தயாராகின்றன. ஆனால் உயர்வெப்பத்தில் சூடாக்குவதால் ரொட்டியில் ப்ரோபயாடிக் பாக்டிரியா உருவாவதில்லை. ஒயினை சூடாக்குவதில்லை எனினும் அதில் உருவாகும் ஆல்கஹால் பாக்டிரியாக்கலை அழித்துவிடுகிறது. காரணம் ஆல்கஹால் ஒரு சிறந்த கிருமிநாசினி smile emoticon
ஆக நம் வயிற்றில் ப்ரொபயாடிக் பாக்டிரியா செழித்து வளர நாம் கெபிர் தயிர், கிம்சி, நாட்டோ, சவர்க்ராட் சாப்பிடணும் என சொன்னால் நம் ஊரில் நம்மை அடிக்க வருவார்கள் smile emoticon இதெல்லாம் எந்த நாட்டு உணவு? தமிழ்நாட்டுக்கு என்ன வழி? தமிழ்நாட்டு உணவில் ப்ரொபயாடிக் பாக்டிரியா இல்லையா?
இருக்கு..ஆனால் இல்லை..டென்சனாகவேண்டாம் smile emoticon அதாவது நம் ஊர் ஊறுகாய் தான் கிம்சி, சவர்க்ராட் எல்லாம். ஆனால் ஊறுகாய்க்கும் இதுக்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில் ஊறுகாயை உயர்வெப்பத்தில் எண்னெயில் வணக்குகையில் அதில் ப்ரொபயாடிக் பாக்ட்ரியா உருவாவதில்லை. ஆக ஊறுகாயை வெப்பமின்றி செய்தால் அதில் ப்ரொபயாடிக் பாக்ட்ரியாக்கள் உருவாகும். நாம் அதன்பின் கெபிர் தயிர் எங்கே கிடைக்கும், நாட்டோ எங்கே கிடைக்கும் என அலையவேண்டியதில்லை - Neander Selvan

இந்த ஆரோக்கியமான உணவின் செய்முறை குறிப்பினை வழங்கிய "Neander Selvan" அவர்களுக்கு நன்றி :)

3 comments:

 1. யோகராஜ்May 31, 2015 at 1:33 AM

  இந்த முறையில் வைத்தால் பூஞ்சை வருவது போல் உள்ளதே அதனை எவ்வாறு தடுப்பது?

  ReplyDelete
  Replies
  1. தண்ணீர் இல்லாமல் பழத்தை நன்றாக துடைத்து விட்டு வெட்டவும். அடிக்கடி நன்கு குலுக்கி விடவும். தண்ணீர் படாமல் எடுத்து பயன்படுத்தவும்.

   Delete
 2. மிக்க நன்றி. யோகராஜின் கேள்விக்கும் விடை தர வேண்டுகிறேன்.

  ReplyDelete