தேவையான பொருட்கள்:
எழும்பில்லா சிக்கன் - 20 சிறு துண்டங்கள்
சதுரமாக வெட்டிய குடை மிளகாய் (மஞ்சள்,பச்சை,சிவப்பு) - ஒவ்வொன்றிலும் 1
சதுரமாக வெட்டிய வெங்காயம் - 1
கபாப் குச்சி
ஊறவைக்க தேவையான மசாலா:
மஞ்சள் தூள்
மல்லித்தூள்
சீரகத்தூள்
மிளகாய் தூள்
பூண்டு மற்றும் வரமிளகாய் அரைத்த விழுது
உப்பு
தயிர்
எழுமிச்சை சாறு
செய்முறை Grill pan method:
* மேலே குறிபிட்ட, ஊறவைக்கத் தேவையான பொருட்களை நன்கு கலந்து, அதில் சிக்கன்,வெங்காயம்,குடைமிளகாய் கலந்து குளிர்சாதன பெட்டியில் குறைந்தது 2 மணிநேரம் ஊறவைக்கவும்.
* பின்பு புகைப்படத்தில் உள்ளது போல், கபாப் குச்சியில் சிக்கன்,வெங்காயம்,குடை மிளகாய் என்று கலந்து குத்தி வைக்கவும்.
* Grill pan சூடு செய்து அதில் இக்குச்சி வைத்து 4 பக்கமும் வேகவைத்து எடுக்கவும்.
செய்முறை oven method:
* 350 டிகிரி பாரன் ஹீட் (350 degrees fahrenheit) சூடேற்றி, காப்பினை வேக விடவும். சிறிது நேரத்திற்கு ஒருமுறை திருப்பிவிட்டு 20 நிமிடங்கள் வேகவிடவும்.
* கடைசியாக 3 நிமிடங்கள் பராயில் மோடில் வைத்து வேக விட்டு எடுக்கவும்.
* சுவையான சிக்கென் கபாப் ரெடி.
குறிப்பு: மாமிசம் சாப்பிடாதவர்கள், வெங்காயம்,குடைமிளகாய்,பன்னீர் ,வெள்ளரி அல்லது சுஹினி,ஸ்குவாஷ் போன்ற காய்கள் மட்டுமே உபயோகப்படுத்தலாம்.
சமையல் குறிப்பு: Mythili Thiyagu
No comments:
Post a Comment