Tuesday, February 3, 2015

வெண்டைக்காய் முட்டை மசாலா



தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய்  - 20
வேகவைத்த முட்டை - 4
வெங்காயம் - 1/2
தக்காளி - 1
கடுகு - சிறிதளவு
வர மிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிதளவு
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
* வெண்டைக்காயை கழுவி,சுத்தமான துணியால் நன்கு துடைத்து எடுக்கவும். ஒரு வாயகண்ட வாணலியில் 1/2 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு,நீளவாக்கில் அரிந்த வெண்டைக்காயை  வதக்கி எடுத்து வைக்கவும்.
* மற்றொரு வாணலியிலோ அல்லது மண்சட்டியிலோ 1/2 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு, காய்ந்ததும்,கடுகு தூவி பொரிய விடவும்.
* இப்பொது வெங்காயம்,வரமிளகாய்,கறிவேப்பிலை போட்டு வத்தவும். நன்கு வெங்காயம் வதங்கிய பின்பு மிளகாய் தூள்,மல்லித்தூள்,உப்பு சேர்த்து சிறுதீயில் 1 நிமிடம் வதக்கவும்.
* பொடிகளின் பச்சை வாசனை போனதும், நீளவாக்கில் அறிந்த தக்காளி சேர்த்து கிளறி, மூடி வைத்து சிறு தீயில் வேகவிடவும்.
* தக்காளி நன்கு மசிந்து எண்ணெய் பிரிந்த பிறகு, வதக்கி வைத்த வெண்டைக்காய் சேர்த்து கலக்கி விடவும்.  இதையும் சிறுதீயில் 3 நிமிடங்கள் வேகவிடவும்.
* இப்பொழுது வேகவைத்து தோலுறித்த முட்டையை 4 பாகங்களாக வெட்டி, வெண்டைக்காய் மசாலாவுடன் சேர்த்து, மேலும் முட்டை உடையாமல் கலக்கி விடவும்.
* சூடான வெண்டைக்காய் முட்டை மசாலா ரெடி.

சமையல் குறிப்பு: Mythili Thiyagu

குறிப்பு: வெண்டைக்காய் முட்டை மசாலா. இன்று வெண்டைக்காய் பொரியலும், முட்டையும் சாப்பிட நினைத்தேன். எதற்கு தனித்தனியாக என்று, கூட்டு சேர்த்து செய்துட்டேன். பிரமாதமான ருஷி :)

1 comment:

  1. நாளைக்கே பண்ணிப்பாத்துடுவோம் :-)

    ReplyDelete