தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1/2 கிலோ
சதுரமாக வெட்டிய வெங்காயம் - 1 கப்
சதுரமாக வெட்டிய குடைமிளகாய் - 1 கப்
வேகவைத்து,தோலுரித்து அரைத்த தக்காளி - 1 கப்
வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு
தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு
வரமிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
பால் - 1 டேபிள்ஸ்பூன்
வறுத்து அரைக்க தேவையானவை:
வரமிளகாய் - 3
குறுமிளகு - 10
சீரகம் - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி விதை - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 5
காய்ந்த வெந்தய கீரை (கஸ்தூரி மேத்தி) - சிறிது
செய்முறை:
* மேலே வருக்க கொடுத்தவைகளை வெறும் சட்டியில் வறுத்து பொடித்து 2 பாகங்களா வைக்கவும்.
* சிக்கன், உப்பு,மஞ்சள் தூள்,வரமிளகாய் தூள் சேர்த்து நன்கு பிசறி வைக்கவும். இதனை சிறிது எண்ணெய் சேர்த்து பானில் (pan) வறுத்து வைக்கவும் (பொரிக்க கூடாது).
* சிக்கன், உப்பு,மஞ்சள் தூள்,வரமிளகாய் தூள் சேர்த்து நன்கு பிசறி வைக்கவும். இதனை சிறிது எண்ணெய் சேர்த்து பானில் (pan) வறுத்து வைக்கவும் (பொரிக்க கூடாது).
* ஒரு கடாயில் (கடாய் பன்னீர் கடையில் தான் சமைக்க வேண்டுமாம்) வெண்ணை விட்டு பாதி உருகியதும், வறுத்து அரைத்த பவுடரில் பாதியை வெண்ணையில் சேர்த்து வதக்கவும்.
* வெண்ணெய் முழுதும் உருகி, பவுடர் வதங்கி கொண்டிருக்கும் போது,அடுப்பை சிறு தீயில் வைத்து வரமிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.
* இப்பொழுது சதுரமாக நறுக்கிய வெங்காயம் மற்றும் குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
* இவற்றுடன் அரைத்த தக்காளி விழுதினை சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து மூடி வேக விடவும்.
* நன்கு தக்காளியின் பச்சை வாசனை போகும் வரை வதக்கி, பின்பு உப்பு சேர்த்து கிளறவும்.
* இத்துடன் வறுத்த சிக்கனை சேர்த்து மெதுவாக கிளறவும்.
* பின்பு அரைத்த பவுடரில் மீதமுள்ள பாதியை சேர்த்து கிளறவும்.
* பின்பு அரைத்த பவுடரில் மீதமுள்ள பாதியை சேர்த்து கிளறவும்.
* இத்துடன் பாலினை சேர்த்து ஒரு கொதி வந்ததும், கொத்தமல்லி தூவி இறக்கவும்.
சுவையான கடாய் சிக்கன் ரெடி.
சமையல் குறிப்பு: Mythili Thiyagu
No comments:
Post a Comment