தேவையான பொருட்கள்:
பீட்ரூட் - 1
கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - 1/4 to 1/2 கப்
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
புளிக்காத தயிர் - தேவையான அளவு
உப்பு - தேவைக்கேற்ப
பொடியாக நறுக்கிய மல்லித்தழை - சிறிதளவு
செய்முறை:
* ஒரு பீட்ரூட்டை நன்கு கழுவி தோலோடு வேக வைக்கவும். பின் தோலுரித்து துருவி எடுத்துக் கொள்ளவும்.
* வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் தாளித்து நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி துருவிய பீட்ரூட்டுடன் சேர்க்கவும்.
* பின்னர் புளிக்காத தயிர், உப்பு, பொடியாக நறுக்கிய மல்லித்தழை சேர்த்தால் பீட்ரூட் தயிர் பச்சடி தயார்.
இந்த சுவையான, ஆரோக்கியமான சமையல் குறிப்பினை வழங்கிய "Shanthi Pettai" அவர்களுக்கு நன்றி :)
No comments:
Post a Comment