தேவையான பொருட்கள்:
காலிபிளவர் துருவல் - 1 கப்
நெல்லிக்காய் - 2
மிளகாய் - 2
தேங்காய் துருவல் - 3 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள்
காயத் தூள்
வெந்தயத் தூள்
நல்லெண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரிப் பருப்பு,கறிவேப்பிலை
உப்பு
செய்முறை:
* உப்பு போட்ட சுடுநீரில் நன்கு கழுவி சுத்தம் செய்த காலிபிளவரை துருவி வைத்துக் கொள்ளவும்.
* ஒரு நெல்லிக்காயை இலேசான துண்டுகளாக நறுக்கி வாணலியில் எண்ணெய் விட்டு வதக்கி கொள்ளவும்.
* மற்றொரு நெல்லிக்காயைத் துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு அதனோடு தேங்காய், வதக்கிய மிளகாய், மஞ்சள்தூள் சேர்த்து
கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
* வாணலியில் நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரிப் பருப்பு, கறிவேப்பிலை, காயத்தூள், வெந்தயத் தூள் சேர்த்து தாளித்து அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்.
* சிறிது உப்பு சேர்த்து அதனுடன் வதக்கிய நெல்லிக்காய் ,காலிபிளவர் துருவல் சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும். சுவையான நெல்லிக்காய் சாதம் தயார்.
இந்த சுவையான, ஆரோக்கியமான சமையல் குறிப்பினை வழங்கிய "Shanthi Pettai" அவர்களுக்கு நன்றி :)
இந்த சுவையான, ஆரோக்கியமான சமையல் குறிப்பினை வழங்கிய "Shanthi Pettai" அவர்களுக்கு நன்றி :)
No comments:
Post a Comment