Wednesday, February 4, 2015

நெல்லிக்காய் துவையல்



தேவையான பொருட்கள்:

நெல்லிக்காய் 
இஞ்சி 
பூண்டு 
பெருங்காயம் 
காந்தாரி மிளகாய் 
உப்பு 

செய்முறை:

முதலில் நெல்லிக்காய்களை அவித்து எடுத்து ஆற வைத்து கொட்டைகளை நீக்கி விட்டு மிக்சியில் இட்டு அதனுடன் உப்பு,இஞ்சி ,பூண்டு,காயம் ,காந்தாரி மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.

நெல்லிக்காய்  துவையல் - இந்த ஆரோக்கியமான சமையல் குறிப்பினை வழங்கிய "Fasalul Huck" அவர்களுக்கு நன்றி :)

மற்றொருமுறை:
சமைக்காமலேயே நெல்லிக்காய் துவையல் செய்முறையை நண்பர் பகிர்ந்திருந்தார், அருமையான சுவையாகவும் இருந்தது

ரெசிபி:

நெல்லிக்காய் துவையல்
250 கிராம் முழு நெல்லிக்காய்களை நறுக்கி கொட்டைகளை நீக்கவும். சிறிது நேரம் நறுக்கிய நெல்லிக்காய்களை தண்ணீரில் ஊறவைத்து, 5 பல் பூண்டின் தோலை நீக்கவும். 20 கிராம் இஞ்சித் தோலை நீக்கி நறுக்கி எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து அரைக்கவும். இதனுடன் மிளகுத்தூள், பிளாக்சால்ட் சிறிதளவு சேர்த்துக் கலக்கவும்.
பலன்கள்:

ஊறுகாய்க்கு பதில் பயன்படுத்தலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. நன்றாகப் பசியெடுக்கும். அஜீரணக் கோளாறு விலகும். இளமையைத் தக்கவைக்கும். உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.

இந்த ஆரோகியமான "சமைக்காமலேயே நெல்லிக்காய் துவையல் " சமையல் குறிப்பினை வழங்கிய "Shankar ji"அவர்களுக்கு நன்றி :) 


1 comment:

  1. நெல்லிக்காயை அவித்தால் அதில் ஏதும் சத்து கிடைக்காது. விட்டமின் சி ஆவியாகிவிடும். அப்புறம் நெல்லிக்காய் சாப்பிடுவதன் பயன் ஏதும் இல்லை.

    ReplyDelete