Wednesday, February 4, 2015

ஸ்வீட் பெப்பர் ஆம்லட்



செய்முறை:
நெய்யை வாணலியில் மிதமாக சூடாக்கி   சீரகம் வெடிக்க விட்டு வெங்காயம் தக்காளி பொடியாக நறுக்கிய பல நிறங்களில் உள்ள ஸ்வீட் பெப்பர் களையும் (குட்டி குடமிளகாய் போல உள்ளது) வதக்கி விடவும். வதங்க சிறிது நேரம் எடுக்கிறது. சீக்கிரம் வேக வேண்டுமானால் சிறிது ( 1 ஸ்பூன்) தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும். கால் ஸ்பூனுக்கும் குறைவான   மிளகாய் தூள் அண்ட் மல்லி தூள் சேர்த்து வதக்கவும். சிறிது மசாலா தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.வதங்கிய காய்களை வேறு பாத்திரத்தில் எடுத்து வைத்துகொள்ளவும். வாணலியை மிதமான சூட்டில் வைத்து சிறிது நெய் தடவி 2 அல்லது 3 முட்டைகளை வட்டமாக ஊற்றவும். லேசாக உப்பு தூவி, காய்கறி கலவையை அதன் மேல் பரப்பவும். மூடி போட்டு மூடவும். ஓரிரு நிமிடங்களில் இரண்டு பக்கமும் வெந்து விடும். கொத்தமல்லி மற்றும் உதிர்த்த பனீர் தூவி சாப்பிடவும். ( பனீர் தூவுவது அவரர் விருப்பத்திற்கு உட்பட்டது)

ஸ்வீட் பெப்பர் ஆம்லட் - இந்த சமையல் குறிப்பினை வழங்கிய "Raji Vanchi" அவர்களுக்கு நன்றி.

No comments:

Post a Comment