Thursday, February 5, 2015

பன்னீர் பச்சைபட்டாணி உருளை சீஸ் பேக்



உருளை ,பட்டாணி பேலியோ இல்லை என்பவர்கள் காரட் , முட்டைகோஸ் சேர்த்துக் கொள்ளவும் ..வாரியர் உணவுக்கு இது ஓகே
தேவை ..உருளை ஒன்று , கொஞ்சம் பச்சை பட்டாணி , பன்னீர் நூறு கிராம் , வெங்காயம் ஒன்று , தக்காளி ஒன்று , பூண்டு இஞ்சி , பச்சைமிளகாய் , மிளகு பொடி , துருவிய சீஸ் , வெண்ணெய் , முந்திரி பருப்பு பத்து .. .உப்பு தேவைக்கு
உருளை , பட்டாணி இரண்டையும் நன்றாக வெண்ணையில் வதக்கி கொள்ளவும் .
வெங்காயம் , தக்காளி நீரில் வேகவைத்து அதை நன்றாக அரைத்து வைக்கவும்
பூண்டு , இஞ்சி , பச்சைமிளகாய் விழுதாக அரைத்து கொள்ளவும்
முந்திரி பருப்பு பத்து நீர் விட்டு கெட்டியாக அரைக்கவும்
ஒரு வாணலியில் வெண்ணெய் போட்டு அதில் அரைத்த வெங்காய விழுது , பூண்டு விழுது சேர்த்து வதக்கி கொஞ்சம் நீர் விட்டு பச்சை மணம் போக கொதிக்கவைக்கவும் ..பிறகு அதில் அரைத்த முந்திரி மற்றும் பன்னீர், உப்பு சேர்த்து கொஞ்சம் கெட்டியாகும் வரை கொதிக்கவிட்டு மேலே மிளகு பொடி தூவிவிடவும்
ஒரு வெண்ணெய் தடவிய பேக்கிங் டிஷ்ல முதல் லேயர் உருளை பட்டாணி வதக்கியது ..இதை நன்றாக விழுதாக அரைத்தும் செய்யலாம் ..ஆனால் நான் அப்படி செய்யவில்லை ..அதற்க்கு மேல் பன்னீர் லேயர் ,மேலே துருவிய சீஸ் சேர்த்து இருபது நிமிடங்கள் பேக்கிங் ஓவன் அல்லது மைக்ரோ ஓவன்ல் கிரில் /கன்வெக்ஷன் மோடில் இருபது நிமிடம் வைத்து எடுக்கவும் ..

இந்த சமையல் குறிப்பினை வழங்கிய அம்மா "Dolly Bala"அவர்களுக்கு நன்றி :)





No comments:

Post a Comment