Wednesday, February 25, 2015

கோவக்காய் அவியல்



தேவையானப்பொருட்கள்:
கோவக்காய் - 10 முதல் 15 வரை
மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - 3 முதல் 4 டேபிள்ஸ்பூன் வரை
சீரகம் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 அல்லது 3
தயிர் - 1/2 கப்
தேங்காய் எண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:
* கோவக்காயை கழுவி விட்டு, நீள வாக்கில் 4 அல்லது 5 துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்அதில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, நன்றாக பிசறி வைக்கவும்.
* தேங்காய் துருவல், சீரகம், பச்சை மிளகாய் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு, 1 அல்லது 2 டேபிள்ஸ்பூன் தயிரையும் சேர்த்து, சற்று கொரகொரப்பாக அரைத்துதெடுக்கவும்.
* ஒரு வாணலியை அடுப்பிலேற்றி, ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணை விட்டு காய்ந்ததும் அதில் கோவக்காய் துண்டுகளைப் போட்டு, 2 அல்ல்து 3 நிமிடங்கள் வரை வதக்கவும். பின்னர் அதில் ஒரு கை நீரைத் தெளித்துக் கிளறி விட்டு, மூடி வைத்து, மிதமான தீயில் வேக விடவும்.  
* காய் முக்கால் பங்கு வெந்தால் போதும், மூடியைத் த்றந்து, காயின் மேல் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதைப் போடவும். (இப்பொழுது கிளற வேண்டாம்).  அப்படியே மூடி வைத்து மேலும் 2 நிமிடங்கள் வேக விடவும்
* பின்னர் மூடியைத் திறந்து, கிளறி விட்டு, அதில் மீதமுள்ள தேங்காய் எண்ணையை ஊற்றி, கறிவேப்பிலையயும் சேர்த்துக் கிளறவும்   கடைசியில், தயிரை நன்றாகக் கடைந்து, காயில் ஊற்றிக் கிளறி, உடனே இறக்கி வைக்கவும்.

சமையல் குறிப்பு: Mythili Thiyagu



No comments:

Post a Comment