Tuesday, February 3, 2015

முஹலாய் கோழி வறுவல்


தேவையான பொருட்கள்:
கொத்திய கோழிக்கறி - அரைக் கிலோ
பச்சை மிளகாய் - 6
தக்காளி - 4
பெரிய வெங்காயம் - 2
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலாத் தூள் - ஒரு தேக்கரண்டி
பூண்டு - 10 பற்கள்
இஞ்சி - 2 அங்குலத் துண்டு
நெய் - 4 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி அளவு

செய்முறை:
* வாணலியில் நெய் விட்டு நறுக்கிய இஞ்சி பூண்டினைப் போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும்.
* அத்துடன் கொத்திய கோழிக்கறியினை சேர்த்து, கரம் மசாலாத் தூள், மிளகாய்த் தூள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்துப் பிரட்டி மிதமான தீயில் நன்கு வேகவிடவும்.
* கறி முக்கால் பதம் வெந்த நிலையில் நறுக்கிய தக்காளியைச் சேர்த்து, தீயை சற்று அதிகமாக்கி நெய் பிரியும் வரை வதக்கவும்.
* அதன் பிறகு பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி, கறி நன்கு வேகும் வரை வைத்திருந்து வெந்தவுடன் இறக்கவும்.
* சுவையான மொஹல் சிக்கன் கறி ரெடி. கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும். சப்பாத்தி, பரோட்டாவுடன் சேர்த்துச் சாப்பிட பொருத்தமாக இருக்கும்.


குறிப்பு: இது என் சொந்த சமையல் குறிப்பு இல்லை. தேடிப்பிடித்தது. சமையல் குறிப்பிற்கு உரிமையானவர் பாக்கியலக்ஷ்மி. புகைப்படம் -  கூடியவிரைவில் போஸ்ட் செய்கிறேன். 


No comments:

Post a Comment