தேவையான பொருட்கள்:
கோழி சிறு துண்டுகள் (எழும்புடன்) - 10 எண்
வெங்காயம் - 10 சின்னது அல்லது 1/2 பெரியது
தக்காளி - 1
பூண்டு - 5 பல்
கறிவேப்பிலை - 1 கொத்து
பட்டை - 1"
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
பிரியாணி இலை - 1
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி இலை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
அரைக்க:
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 10
சோம்பு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1
கறிவேப்பிலை - 2 இலை
செய்முறை:
* கோழியை மஞ்சள் தூவி, சுத்தம் செய்தும் மற்றும் அரைக்க கொடுத்த பொருட்களை அரைத்தும் தயாராக வைக்கவும்.
* மேலே கூறிய அனைத்தையும் (தேவையான பொருட்கள் + அரைத்த விழுது) ஒரு குக்கரில் ஒன்றாக கலக்கி, 2 கப் தண்ணீர் உற்றி 4 டு 5 விசில் விட்டு இறக்கவும்.இத்துடன் கொத்தமல்லி இலை சேர்த்து பரிமாறவும்.
நெஞ்சு சளி இருந்தால், உடைத்துக்கொண்டு வெளியே வந்துடும்.
குறிப்பு: இந்த சமையல் குறிப்பினை ஸ்லொவ் குக்கரிலும் செய்யலாம்.
சமையல் குறிப்பு: Mythili Thiyagu
No comments:
Post a Comment